
தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தன் பெயருடன் நரேந்திர மோடி சேர்த்து வைத்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2
நரேந்திர மோடியின் எக்ஸ் தள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Narendra Modi (Naidu, Nithish ka Parivaar)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சமூக வலைதள பெயர்களில் உள்ள “மோடியின் குடும்பம்” என்பதை நீக்குமாறு மோடி கோரிக்கை. Meanwhile Modi now” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தங்கள் பெயருக்கு அருகில் மோடியின் குடும்பம் (மோடி கா பரிவார்) என்று சேர்த்துக்கொண்டனர். தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் அந்த வார்த்தையை அகற்றிவிடும்படி நரேந்திர மோடி வேண்டுகோள்விடுத்தார்.
மோடியின் குடும்பம் என்பதை நீக்கும்படி மோடியே கூறியதை வைத்தும் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு முக்கிய காரணமாக இருப்பதைக் குறிக்கும் வகையில் நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று சேர்த்துவிட்டது போன்று சிலர் சமூக ஊடகங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாக எந்த ஒரு நபரின் எக்ஸ் தள முகப்பு பக்கத்திலும் பெயருக்கு அருகில், @ என்று தொடங்கும் எக்ஸ் தள முகவரியும் இருக்கும். ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தில் நரேந்திர மோடியின் எக்ஸ் தள முகவரி இல்லை. நரேந்திர மோடியின் எக்ஸ் தள பக்கத்துக்கு சென்று பார்த்தோம். அதில் நாயுடு, நிதிஷ் கா பரிவார் என்று இல்லை.
உண்மையில் மோடி நாயுடு, நிதிஷ் கா பரிவார் என்று குறிப்பிட்டிருந்தால் எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கும். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
எக்ஸ் தளத்தில் தன்னுடைய பெயருக்கு பின் நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று நரேந்திர மோடி சேர்த்துக்கொண்டதா பரவும் ஸ்கிரீன்ஷாட் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தனது பெயருடன் சேர்த்தாரா நரேந்திர மோடி?
Written By: Chendur PandianResult: False
