
‘’உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல், திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

அக்டோபர் 26, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், உதயநிதி ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அவரது தலைக்கு மேலே, ‘’திருடர்கள் ஜாக்கிரதை,’’ என்ற வாசகம் உள்ளது. இதனை பகிர்ந்தவர், ‘’சரியான இடத்துல தான் நிக்கற‘’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மெட்ரோ ரயிலில் உதய்நிதி ஸ்டாலின் பயணம் மேற்கொண்ட வரை தகவல் சரிதான். ஆனால், அவரது தலைக்கு மேலே, ‘’திருடர்கள் ஜாக்கிரதை‘’ என எழுதப்பட்டுள்ள வாசகம் சற்று சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. எனவே, இது உண்மையா, என்ற சந்தேகத்தில் நாம் உதயநிதி ஸ்டாலின் உதவியாளரிடம் விவரம் கேட்டோம்.
புகைப்படத்தை பார்வையிட்ட அவர், ‘’இது எடிட் செய்த புகைப்படம். உண்மையான புகைப்படம் வேறு ஒன்று,’’ எனக் கூறினார்.
உண்மையான புகைப்படமும் நமக்கு காணக் கிடைத்தது. அதனை கீழே ஒருமுறை ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, உதயநிதி ஸ்டாலின் பற்றி வேண்டுமென்றே எடிட் செய்த புகைப்படத்தை அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் பகிர்ந்து வருவதாக சந்தேகமின்றி தெளிவாகிறது. அவரது அசல் புகைப்படத்தை, இந்த எடிட் செய்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு, கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா?
Fact Check By: Pankaj IyerResult: Altered

This fact crescendo.com is running on behalf Ipac and DMK. Is itvcorrect