
‘’2024 தீபாவளி பரிசாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தி டெம்ப்ளேட் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில், ‘’மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு. ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில் நாம் நேரடியாக, புதிய தலைமுறை ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’இதுபோன்ற செய்தி எதுவும் நாங்கள் சமீபத்தில் வெளியிடவில்லை. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எங்களது பெயரில் வெளியான செய்தியின் டெம்ப்ளேட் ஒன்றை எடுத்து, புதியது போன்று வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
இந்த செய்தியில்தான் ‘’மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு. ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக, 2024 ஜனவரி 1ம் தேதியை முன்னிட்டு, அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக, மத்திய அரசு (Dept of Expenditure) கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றை கண்டோம்.

மற்றபடி, இந்த ஃபேக்ட்செக் கட்டுரை வெளியாகும் இந்த நொடி வரையிலும், 2024 தீபாவளி பண்டிகையை ஒட்டி அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக, மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
Businesstoday Link l India TV News l Hindustan Times
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி பரிசாக, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனை பார்த்து, சிலர் உணர்ச்சிவசப்பட்டு, ஆர்வக் கோளாறில் பழைய செய்தியை எடுத்து, புதியது போல பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:2024 தீபாவளி பரிசாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: MISLEADING
