
‘’மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தடை விதிக்க வேண்டும்,’’ என்று சி.வி.சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’பணம் கொடுக்கத் தடைகோரி மனு. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் திட்டங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடியும்வரை தடைவிதிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
NewsJ டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், நாம் இதுபற்றி NewsJ ஆசிரியர் குழு தரப்பில் விளக்கம் கேட்டோம். இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு. இதுதொடர்பாக, ஏற்கனவே நாங்கள் சமூக வலைதளம் வாயிலாக மறுப்பு தெரிவித்துள்ளோம், என்று தெரிவித்தனர்.
இதன்படி, தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.வி.சண்முகம் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதன்பேரில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இதுதொடர்பாக, NewsJ ஊடகம் கடந்த ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியிட்ட நியூஸ்கார்டை எடிட் செய்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
NewsJ தரப்பில் சமூக வலைதளம் வாயிலாக வெளியிடப்பட்ட மறுப்பு செய்தியையும் கீழே இணைத்துள்ளோம்.
அதேசமயம், சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் இடைக்கால தடை அகற்றப்பட்டதோடு, சி.வி.சண்முகத்திற்கு அபராதம் விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும், இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Polimer News l Thanthi TV l News18 TamilNadu
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ்கார்டு, உண்மையானதல்ல, என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கும் திட்டங்களை தடை செய்யும்படி சி.வி.சண்முகம் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
