‘’2021ல் நிகழ்ந்த சென்னை வெள்ள பாதிப்பு வீடியோ- மக்கள் அவதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கும் காட்சிகள் மேற்கண்ட வீடியோ செய்தியில் இடம்பெற்றுள்ளன. இதனை பலரும் 2021 நவம்பர் மாதத்தில் நிகழ்ந்ததைப் போல குறிப்பிட்டு, தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
2021 நவம்பர் மாதம் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் பற்றி ஏராளமான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஆனால், மேற்கண்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் வெவ்வேறாக உள்ளன. அவை உண்மைதான் என்றாலும், எப்போது எடுக்கப்பட்டன என்பது தெரியாமல் இதனை பலரும் ஷேர் செய்கின்றனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட வீடியோ எப்போது எடுக்கப்பட்டதென, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இந்த வீடியோ மிகவும் பழையதாகும். நாங்கள் 2021ல் இதனை வெளியிடவில்லை,’’ என விளக்கம் அளித்தார்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:2021ல் நிகழ்ந்த சென்னை வெள்ள பாதிப்பு வீடியோவா இது?

Fact Check By: Pankaj Iyer

Result: Partly False