‘’ தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பெண் வாக்காளர்களை தகாத வார்த்தையில் திட்டினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ உங்க ஓட்டு பிச்ச எனக்கு தேவை இல்ல. தேனி அதிமுக வேட்பாளர் கோபம்! தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை பெண்கள் சூழ்ந்து கேள்வி கேட்டதால் கோபமடைந்த அவர், பெண்களை தகாத வார்த்தையில் திட்டியபடி, உங்க ஓட்டு பிச்ச எனக்கு தேவை இல்ல, என சொன்னதால் பெண்கள் அதிர்ச்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இவ்வாறு பெண் வாக்காளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்டாரா என்று தகவல் தேடியபோது, எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.

அடுத்தப்படியாக, இதுபோன்று பாலிமர் நியூஸ் சார்பாக எதுவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்று விவரம் தேடினோம். அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தபோது, ஏப்ரல் 13ம் தேதியன்று, ‘’இந்த நியூஸ் கார்டுகள் போலியானவை’’ என்று குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தனர்.

இதன்படி, நாராயணசாமியை குறி வைத்து வேண்டுமென்றே சிலர் தொடர்ச்சியாக பாலிமர் ஊடகத்தின் லோகோ பயன்படுத்தி போலியாக செய்தி தயாரித்து பரப்புகின்றனர் என்று தெரியவருகிறது. இதில் ஒரு வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதும்…

Archive Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியை பாலிமர் நியூஸ் வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பெண் வாக்காளர்களை தகாத வார்த்தையில் திட்டினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: ALTERED