‘’ சினிமா இயக்குனர் மிஸ்கின் காலமானார்,’’ என்று கூறி, புதிய தலைமுறை லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இயக்குநர் மிஷ்கின் காலமானார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இதுபோன்ற செய்தி எதுவும் புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் விளக்கம் கேட்டோம். அவர் ‘’இது போலியானது, நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று குறிப்பிட்டு, மேற்கண்ட நியூஸ் கார்டின் மேலேயே சீல் வைத்து, நமக்கு திருப்பி அனுப்பினார்.

மேலும், மிஷ்கின் தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் மிஷ்கின் பேசிய கருத்துகளால் ஆத்திரமடைந்த சிலர் இவ்வாறு வதந்தி பரப்புவதாக, அவர்கள் குறிப்பிட்டனர்.

News18 Tamil l Hindu Tamil l Filmi Beat Tamil l Times of India

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, புதிய தலைமுறை பெயரில் பரவும் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:சினிமா இயக்குனர் மிஷ்கின் காலமானார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False