செய்திவாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் பன்னீர்செல்வத்துக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக பலரும் புதிய தலைமுறை ஊடகத்தை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் என்பவரின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பனி மலருக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிப் புகழ் பெற்றவர் பனிமலர் பன்னீர்செல்வம். சமூக ஊடகங்களில் சிலர் இவரைப் பற்றி அவதூறாக விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். இதை வைத்து ஊடகங்களில் வெளியான செய்தி என்பது போன்று வதந்திகள் பரப்பப்பட்டன. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவிலேயே ஃபேக்ட் செக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.

தற்போது அவரது உதட்டில் காயம் ஏற்பட்டது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்டு பலரும் புதிய தலைமுறை ஊடகத்தை விமர்சித்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டை உண்மையில் புதிய தலைமுறை வெளியிட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டின் வடிவமைப்பு புதிய தலைமுறை வெளியிட்டது போல் இல்லை. மேலும், அதன் வடிவமைப்பில் ஏதோ மாறுதல் செய்தது தெளிவாகத் தெரிகிறது. பார்க்கும் போதே இது போலியானது என்று தெரிகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆதாரங்களைச் சேகரித்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அந்த நியூஸ் கார்டில் 26 ஜூன் 2024 என்று இருந்தது. அன்றைய நாளில் அப்படி எந்த ஒரு நியூஸ கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை. இதை உறுதிசெய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

அதைத் தொடர்ந்து இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று 'FAKE' முத்திரை குத்தி, புதிய தலைமுறை இணையதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் பன்னீர்செல்வத்தின் உதட்டில் காயம் ஏற்பட்டது என்று புதிய தலைமுறை வெளியிட்டது போன்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பனிமலர் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False