எச். ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று கூறிய எச்.ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹெச்.ராஜாவுக்கு கண்டனம். நாடார்கள் தமிழர்கள் அல்ல என ஹெச்.ராஜா பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்மீதும் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் ஹெச்.ராஜாவுக்கு இருக்கும் கோவத்தை ஒரு சமூகத்தின் மீதே காட்டுவது தவறு. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறோம்.

உண்மை அறிவோம்:

நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று கால்டுவெல் கூறினார் என்று எச்.ராஜா பேசியிருந்தார். இதை எடிட் செய்து நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டு பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டது போல இருந்தாலும், அவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள், வடிவமைப்பில் உள்ள சிறு வித்தியாசம் உள்ளிட்டவை இது போலியானது என்பதை உறுதி செய்கிறது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு அதில் இல்லை. எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். இது போலியானது என்று FAKE முத்திரைகுத்தி நமக்குப் பதிவு வெளியிட்டுள்ள தகவலை அனுப்பினர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எச்.ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:எச். ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தாரா?

Written By: Chendur Pandian  

Result: False