
‘’இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளாரா என விவரம் தேடினோம். அப்படி எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரகுராம் ராஜன் நிற்கும் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்று பார்த்தோம்.
இது கடந்த 2013ம் ஆண்டில், The University Of Chicago Booth School of Business-ல் ரகுராம் ராஜன், பேராசிரியராக பணியில் சேர்ந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்தது.

அவரது அலுவலக இணையதளம் மற்றும் LinkedIn சுய விவரம் போன்றவற்றில் தற்போதும் மேற்கண்ட கல்வி நிறுவனத்திலேயே பணிபுரிகிறார் என விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Raghuram Rajan Faculty Profile I LinkedIn Profile
இது மட்டுமின்றி BBC ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், இங்கிலாந்து வங்கியின் கவர்னராக எந்த பதவியும் ஏற்கவில்லை என்று ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தற்போதைய கவர்னர் யார் என விவரம் தேடினோம். அப்போது, Bank Of England அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போதைய கவர்னராக Andrew Bailey என்பவர் உள்ளதாகவும், இவரது பதவிக் காலம், 2028 வரை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Bank Of England Website Link I The Guardian Link
எனவே, கடந்த சில ஆண்டுகளாகவே, இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டதாக வதந்தி பரவி வரும் நிலையில், இதனை ஏற்கனவே அவர் மறுத்துள்ளார்; இதுதவிர, குறிப்பிட்ட இங்கிலாந்து வங்கியின் கவர்னராக தற்போது வேறு ஒருவர் உள்ளார் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
