வெள்ளத்தில் மூழ்கிய இந்து அமைப்பு தலைவரின் வீடு; நிவாரண முகாமுக்கு வர மறுத்தாரா?

அரசியல் சமூக ஊடகம்

கேரளாவில் இந்து அமைப்பு ஒன்றின் தலைவரின் வீடு மழை வெள்ளத்தில் மூழ்கியதாகவும் கிறிஸ்தவ ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு வர மறுத்து அவர் போராட்டம் செய்து வருவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Sasikala 2.png

Facebook Link I Archived Link

ஹிந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பின் தலைவராக உள்ள சசிகலா என்பவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர், சசிகலா… ஹிந்து ஐக்கிய வேதி என்ற, சங்கி அமைப்பின் தலைவர். ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர்.

இவரது வீடு,கேரள மாநிலத்தில் பட்டாம்பி எனும் ஊரில் உள்ளது.. இவரது வீடு, இப்போதைய, பெரு மழையில், முற்றிலும் மூழ்கி விட்டது… எனவே, பக்கத்தில் உள்ள, கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள, அரங்கில் அமைந்துள்ள முகாமில் வந்து,மக்களோடு தங்கிக் கொள்ளுமாறு அழைத்த போது, கிறிஸ்தவ தேவாலயத்தில் சென்று தங்க முடியாது என்று கூறியதோடு, தனது மூழ்கிக்கிடக்கும் வீட்டின் மீது ஏறி நின்று, தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்….

பேரழிவின் போது கூட, மத வெறியின் உச்சத்தில் நிற்கும், இந்த ஜென்மங்கள் தான் இந்திய மண்ணின், அவமானச் சின்னங்கள்…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Mohamed Rafi என்பவர் 2019 ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரளாவில் இந்த ஆண்டு கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த சூழ்நிலையில், இந்து அமைப்பின் தலைவர் ஒருவரின் வீடு மூழ்கிவிட்டதாகவும், கிறிஸ்தவ ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு அவர் வர மறுப்பு தெரிவித்ததாகவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அங்கு கன மழை பெய்து வருவதால் இது உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த தகவல் உண்மையா என்று கண்டறிய, இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இவர் பெயர் சசிகலா, இந்து அமைப்பு ஒன்றின் தலைவராக உள்ளார் என்று உறுதியானது. ஆனால், இவரது வீடு மூழ்கியதாகவோ, முகாமுக்கு வர மறுத்து போராட்டம் செய்து வருவதாகவோ எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இவர் பெயர் சசிகலா, இந்து அமைப்பு ஒன்றின் தலைவராக உள்ளார் என்று உறுதியானது. ஆனால், இவரது வீடு மூழ்கியதாகவோ, முகாமுக்கு வர மறுத்து போராட்டம் செய்து வருவதாகவோ எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

Sasikala 3.png

இதைத் தொடர்ந்து, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவினரிடம் (www.malayalam.factcrescendo.com) கேட்டோம். படத்தில் இருப்பவர் இந்து அமைப்பின் தலைவிதான். ஆனால், அவர் வீடு தண்ணீரில் மூழ்கியதாக வரும் தகவல் பொய்யானது. கேரளாவில் கூட, அவர் வீடு தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் மசூதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமுக்கு வரும்படி அவரை அழைத்ததாகவும் ஆனால், அவர் வர மறுத்து தன்னுடைய வீட்டின் மீது ஏறி போராட்டம் செய்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவிவருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம், சசிகலாவிடம் பேசினோம்.

அப்போது அவர், “என்னுடைய வீடு தண்ணீரில் மூழ்கவில்லை. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். என்னுடைய வீடு மூழ்கிவிட்டதாகவும், அருகில் உள்ள மசூதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு வர மறுத்து வீட்டில் போராட்டம் செய்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் வரும் தகவலை நானும் பார்த்தேன். அப்படி எந்த ஒரு சூழ்நிலையும் எனக்கு ஏற்படவில்லை. என் வீட்டின் அருகில் மசூதியே இல்லை” என்றார்.

இதைத் தொடர்ந்து, சசிகலா பற்றி பரவும் தகவல் பொய்யானது என்று நாங்கள் கட்டுரை வெளியிட்டுள்ளோம் என்று கூறி அதற்கான இணைப்பை நமக்கு அளித்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். அந்த கட்டுரையை பார்க்கும்போது, மலையாளத்தில் பரவும் வதந்தியை மொழி மாற்றம் செய்து, அதே படத்துடன் தமிழில் வெளியிட்டுள்ளது தெரிந்தது.

சசிகலாவின் ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று பார்த்தோம். அதில், அவர் இந்த வதந்தி தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதை மலையாளம் பிரிவுக்கு அனுப்பி, மொழி மாற்றம் செய்து தரக் கேட்டோம். அதில், “மிகப்பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லோரும் வேற்றுமைகளை மறந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனால், இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு நேரத்தில் கூட வதந்திகள் பரவுகின்றன.

Archived Link

வளைகுடா நாட்டில் வேலை செய்யும் ஒரு சமூக விரோதி, என்னுடைய வீடு வெள்ள நீரால் மூழ்கிவிட்டதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதன் விளைவு பலரும் எனக்கு போன் செய்து, வாட்ஸ்அப், சேட்டில் மெசேஜ் செய்து கேட்கின்றனர். என்னுடைய வீட்டில் கால் நனைய வேண்டும் என்றால் குழாயைத் திறந்தால் மட்டுமே முடியும். என் வீட்டைச் சுற்றி கடவுள் அனுக்கிரகத்தால் எந்த மழைநீர் சூழவில்லை. என் வீட்டைச் சுற்றி மட்டுமல்ல எனக்குத் தெரிந்து என் வீட்டைச் சுற்றி அரை கி.மீ தூரத்துக்கு எங்கும் மழை வெள்ளம் இல்லை. என் வீட்டுக்கு அருகே எந்த ஒரு நிவாரண முகாமும் அமைக்கப்படவில்லை” என்றார்.

நம்முடைய ஆய்வில்,

கேரளாவில் உள்ள இந்து அமைப்பு ஒன்றின் தலைவர் சசிகலா வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ மலையாள பிரிவு மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வில் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சசிகலா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய வீடு உள்ள பகுதியில் மழை வெள்ள பாதிப்பு இல்லை என்றும், வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த வதந்தியை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டிய வீடியோ கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்தி ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் சசிகலாவின் வீடு வெள்ளத்தால் மூழ்கியதாகவும் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு வர மறுத்து தன்னுடைய வீட்டின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருகிறார் என்றும் வெளியான ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வெள்ளத்தில் மூழ்கிய இந்து அமைப்பு தலைவரின் வீடு; நிவாரண முகாமுக்கு வர மறுத்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False