நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ: உண்மை அறிவோம்!

அரசியல் சமூக வலைதளம்

‘’நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் பதிவுகளை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1News LinkArchived Link 2
The Cineflix

என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 29, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது Tamizhakam.com என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகிறோம்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ இளம் பெண்ணுடன் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் கிளு கிளு – தீயாய் பரவும் வீடியோ இதோ,’’ என தலைப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த செய்தியை கிளிக் செய்து பார்த்தபோது, அதில், ‘’ இளம் பெண்ணுடன் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் கிளு கிளு – தீயாய் பரவும் வீடியோ – உண்மை என்ன..?,’’ என்று தெளிவாகக் கூறியுள்ளனர். அத்துடன் செய்தியின் உள்ளே, ‘’நாஞ்சில் சம்பத் பெயரில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுபற்றி நாஞ்சில் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பவர் யார் என தெளிவாக தெரியவில்லை,’’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இணையதள செய்திக்கு தலைப்பு வைத்ததைப் போலவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவிலும் எழுதியிருந்தால் எந்த தப்பும் இல்லை. நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ, என நேரடியாகக் கூறியிருப்பதன் மூலமாக, இந்த செய்தியின் தலைப்பு தவறு என உறுதியாகிறது.

இதேபோன்ற ஃபேஸ்புக் பதிவுகளை நிறைய காண நேரிட்டது. இதில், சில இணையதளங்கள் தவறான தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்ததையும் பார்த்தோம்.

நாஞ்சில் சம்பத் இதுபற்றி மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில், 2வது வீடியோ ஒன்றும் அவரை பற்றி வெளியாக உள்ளதாகக் கூறியும் சிலர் பதிவு வெளியிட்டுள்ளனர்.

Facebook LinkArchived Link 1TN News24 LinkArchived Link 2

இதுபற்றிய தேடலின்போது, குறிப்பிட்ட வீடியோவில் இருப்பவர் நாஞ்சில் சம்பத் இல்லை, பாஜக மற்றும் அதிமுக.,வினர் அவர் மீது வதந்தி பரப்புகிறார்கள், அந்த வீடியோ வட இந்திய பிரமுகர் ஒருவர் தொடர்பானது எனக் கூறி வெளியிடப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது.

Facebook Link Archived Link 

இதன்படி, மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் வெளியான செக்ஸ் மோசடி விவகாரத்தில் தொடர்புடைய வீடியோவை பயன்படுத்தி, நாஞ்சில் சம்பத் பெயரில் தவறான தகவல் பரப்பியுள்ளதாக, தெரியவருகிறது. செல்ஃபோனை ஒளித்து வைத்து முக்கிய பிரமுகர்களிடம் நெருங்கி பழகி, அவர்களை வீடியோ எடுத்து மிரட்டி பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வந்த ஸ்வேதா ஜெயின் என்ற பெண் சமீபத்தில் போபாலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ஒன்றுதான் இந்த நாஞ்சில் சம்பத் வீடியோ எனக் கூறப்படுவதும்…

இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவின் தலைப்பு தவறு; மற்றும் சில பதிவுகளில் கூறப்பட்டுள்ள தகவல் ஒட்டுமொத்தமாக தவறு என தெளிவாகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ: உண்மை அறிவோம்!

Fact Check By: Rajesh Pillewar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •