
‘’WWE பிரபலம் ரே மிஸ்டீரியோ காலமானார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ WWE: Rey Mysterio RIP. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் – 90 Kidsன் மறக்க முடியாத ஜாம்பவான்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. அத்துடன், Rey Mysterio புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, சமீபத்தில் உயிரிழந்தவர் Rey Mysterio கிடையாது என்றும், அவரது உறவினர் Rey Misterio Senior (மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டவர்) என்றும் தெரியவந்தது.
India Today l Fox13 Now l Economic Times
இந்த வேறுபாடு தெரியாமல், முன்னணி ஊடகங்கள் உள்பட பலரும் ரே மிஸ்டீரியோ காலமானதாக, முன்னுக்குப் பின் முரணாக செய்தி பகிர்ந்து வருகின்றனர்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘WWE பிரபலம்’ ரே மிஸ்டீரியோ காலமானதாகப் பரவும் வதந்தியால் சர்ச்சை…
Fact Check By: Pankaj IyerResult: MISSING CONTEXT
