‘’சமீபத்தில் ஆருத்ரா மோசடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆர்.கே.சுரேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஆருத்ரா தங்கநகை முறைகேடு வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராக சென்னை வந்துள்ள நடிகர் ஆர் கே சுரேஷ் எப்படி ஒன்றிய நிதி அமைச்சரே சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்??

பண மோசடி குற்றவாளியை காப்பாற்ற முயற்சிக்கிறாரா ஒன்றிய நிதி அமைச்சர் @nsitharaman??,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும், திமுக ஆதரவாளர்கள் மேற்கண்ட தகவலை அதிகளவில் பரப்புவதைக் காண முடிகிறது.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

ஆருத்ரா தங்க முறைகேடு வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். தற்போது, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக அவர் சென்னை வந்துள்ளார்.

The Hindu Link l Dailythanthi Link l News18 Tamil Link

இந்நிலையில், ஆர்.கே.சுரேஷை காப்பாற்ற பாஜக மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்பு முயற்சிப்பதாகவும், இதுதொடர்பான புகைப்பட ஆதாரம் இதோ எனவும் கூறி மேற்கண்ட வகையில் திமுக ஆதரவாளர்கள் தகவல் பரப்புகின்றனர்.

ஆனால், இந்த புகைப்படம் கடந்த 2022ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். ஆர்.கே.சுரேஷ் இதுபற்றி அவரது X வலைதள பக்கத்தில் ஏற்கனவே பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவரது பதிவை மீண்டும் ஒருமுறை கீழே இணைத்துள்ளோம்.

இதன்படி 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து, புதிய தகவல் சேர்த்து வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஆர்.கே.சுரேஷ் மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading