
‘’சொந்த மகளையே திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய முஸ்லீம் நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ என் மகளை நான் வேறு வீட்டிற்கு அனுப்ப விருப்பம் இல்லை அதனால் நானே திருமணம் செய்தேன் இப்ப என் ம(கள்)னைவி 2மாதம் கர்ப்பம். வாழ்க மார்க்கம் குல்லாகூ லப்பர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது official_rajthakur__ என்ற தனி நபர், தனது ஆன்லைன் சேனலுக்காக தயாரித்த, சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது.
இதுபோன்ற பல வீடியோக்களை குறிப்பிட்ட நபர், இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி அவரது யூடியுப், ஃபேஸ்புக் பக்கங்களிலும் வர்த்தக நோக்கில் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது.
இதுபோன்ற நிறைய சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை அவரது ஆன்லைன் சேனலில் காண முடிகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ உண்மையானதல்ல; சித்தரிக்கப்பட்ட காட்சி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மகளை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய முஸ்லீம் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Pankaj IyerResult: Misleading
