‘வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்தாரா?  

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில், சீமான் எதுவும் X வலைதளத்தில் பதிவு எதுவும் வெளியிட்டுள்ளாரா என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். ‘’இது சீமான் பெயரில் பரவும் வதந்தி,’’ என்று தெரிவித்தனர். அடுத்தப்படியாக, அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கம் (@Seeman4TN)  சென்று தகவல் தேடினோம். ஆனால், எந்த பதிவும் காண கிடைக்கவில்லை. 

இறுதியாக, சீமான் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘’இது போலியாக பகிரப்படும் பதிவு. இவ்வாறு அவர் எந்த பதிவும் சமீபத்தில் பகிரவில்லை,’’ என்று உறுதி செய்தனர். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்தாரா?

Written By: Fact Crescendo Team 

Result: False