
‘’முஸ்லீம் என்பதால் வீட்டிற்குள் நுழைந்து தாக்கிய இந்துத்துவ கும்பல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ எங்கே போய் முடியும் ?
#BJPFailsIndia … hindutvas storm a house and brutally assault residents for being muslims’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ உண்மையா என்று தகவல் தேடியபோது, இது கடந்த 2019ம் ஆண்டு ஹரியானா மாநிலம், குர்கானில் (Bhup Singh Nagar, Bhondsi village, Gurugram) நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது.
இதன்படி, கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், குறிப்பிட்ட முஸ்லீம் குடும்பத்தினரை சிலர் வீடு புகுந்து தாக்கியுள்ளனர். ‘முஸ்லீம்’ என்பதால் மட்டுமே இந்த தாக்குதல் நடைபெறவில்லை, எனவும் குர்கான் போலீசார் அப்போதே கூறியுள்ளனர்.
இதுதவிர தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரதான குற்றவாளியையும் கைது செய்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, ஊடகங்களில் வெளியான சில செய்தி ஆதாரங்கள் இதோ…
News18 Link l Timesofindia Link l Indianexpress Link
கூடுதல், ஆதாரத்திற்கு நமது Fact Crescendo Hindi பிரிவினர் 2019ம் ஆண்டே வெளியிட்ட ஃபேக்ட்செக் கட்டுரையின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, பழைய வீடியோவை எடுத்து, மீண்டும் அதற்கு மதச்சாயம் பூசி, வேண்டுமென்றே சிலர், பொதுமக்களை குழப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:முஸ்லீம் வீட்டிற்குள் நுழைந்து தாக்கிய இந்துத்துவ கும்பல் என்று பகிரப்படும் பழைய வீடியோ…
Written By: Fact Crescendo TeamResult: Misleading
