முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று மோடியை அண்ணாமலை கேட்டுக்கொண்டாரா?
‘’முக்குலத்தோரை கண்டுகொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை சொன்னதால், தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் திட்டத்தை மோடி கைவிட்டுவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேட்டது.
தகவலின் விவரம்:
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தியில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
அத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும் என்று மோடி அறிவித்ததாகவும் செய்தி பரவியது. நாம் கூட இதுபற்றி ஃபேக்ட்செக் செய்துள்ளோம்.
இதுபற்றி ஊடகங்களுக்கு அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார். அதில், மோடி வருகிறாரா என்பதே இன்னும் உறுதி செய்யப்படாத சூழலில், அதற்குள்ளாக சமூக வலைதளங்களில் புதுப்புது தகவல்கள் பரவுவதாகக் கூறியிருந்தார்.
இந்த பேட்டியை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, அண்ணாமலை, முக்குலத்தோரை புறக்கணிக்கும்படி மோடியிடம் கேட்டுக் கொண்டதால், அவர் தமிழ்நாடு வருவதைக் கைவிட்டுவிட்டதாக, தகவல் பரப்புகின்றனர்.
இது தவறான தகவல் என்று ஏற்கனவே, பாஜக ஐ.டி.பிரிவு நிர்வாகி நிர்மல் குமார் கூறியிருக்கிறார். அவர் வெளியிட்ட ட்வீட்டை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று மோடியை அண்ணாமலை கேட்டுக்கொண்டாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False