
‘’இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இந்த வாள் கும்பகர்ணன் உடையது என இலங்கை தொல்பொருள் ஆய்வுக் கண்டுப்பிடிப்பட்டது! ராமாயணம் நடந்தது என்பதற்கு இதைவிட ஆதாரம் இல்லை.. ஜெய் ஸ்ரீ ராம்🚩🚩🚩,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற செய்தி எதுவும் ஊடகங்களில் காண கிடைக்கவில்லை. இதையடுத்து, நமது Fact Crescendo Sri Lanka உதவியை நாடினோம். அவர்கள், ஏற்கனவே இதுபற்றி Archaeological Department of Sri Lanka தரப்பில் விளக்கம் பெற்று, இது தவறான தகவல், என்று உறுதிப்படுத்தியுள்ளதாக, தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற வாள் எதுவும் இலங்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இது AI முறையில் தயாரித்து, பரப்பப்படும் வதந்தி என்றும் கூறி நமது Fact Crescendo Malayalam தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட்செக் வெளியிட்டுள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
