பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க-விலிருந்து விலகி விடுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், அதிமுக-வில் இருந்து விலகிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அதிமுகவிலிருந்த விலகி விடுவேன். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் வன்முறை என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கிக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் இளைஞர்கள் கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வாகனங்களைத் தாக்கி உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரீல்ஸை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

நாக்பூரில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

நாக்பூரில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

கூலிங் பீர் கேட்டு போராட்டம் நடத்தினாரா அண்ணாமலை?

‘’ கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அண்ணாமலை கைது. கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது. தலைமை அலுவலகத்தில் சரக்கு விற்பதில்லை என்று அதிகாரிகள் விளக்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

குஜராத் ஆம் ஆத்மி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக அறை முழுக்க நிறைந்திருக்கும் பணத்தை சிலர் இயந்திரம் உதவியோடு எண்ணும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீடு இடி ரைடில் பெற்ற […]

Continue Reading

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது மக்களவையில் காட்டமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

“வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வோம்” என்று வெளிப்படையாக அமித்ஷா அறிவித்தாரா?

நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாலும் அது காங்கிரசுக்கு போகாது என்று வெளிப்படையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படும் என்ற அர்த்தத்தில் அமித்ஷா பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரு வேறு நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்து ஒரே பதிவாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முதல் நியூஸ் கார்டில், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜக நிர்வாகிகள்” […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி தண்டனை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி ஆதித்யநாத் அரசு வழங்கிய தண்டனை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரப்பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி மெடிடேசன் 🤣🤣🤣 இங்கு தமிழ்நாட்டில் பாலியல் வன்மை கொடுமை செய்தவனை சபாநாயகர் (சாபநாயகர்) தம்பி என்று அழைப்பார்..,’’ என்று […]

Continue Reading

தனலாபத்திற்கு முன் வானதி சீனிவாசன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’தனலாபத்திற்கு முன் வானதி சீனிவாசன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *🧐ஒரு காலத்தில் வசந்த் அன் கோ வில் இந்த ஸ்டவ் வாங்கிட்டு EMI கட்ட முடியாமல் திருப்பி கொடுத்த இந்த பெண்மணி இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு தனலாபத்தோடு அதிபதியாக விளங்கும் இவர் யார் என்று […]

Continue Reading

இந்து கோவிலில் இருந்து ரூ.445 கோடி வசூலித்து மசூதி, சர்ச்சுகளுக்கு வழங்கியதா தி.மு.க அரசு?

இந்து கோவில்களிலிருந்து ரூ.445 கோடி பணத்தை வசூலித்து அதில் 330 கோடியை மசூதி, தேவாலயம் கட்ட கொடுத்த தி.மு.க அரசு என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை மீண்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “கோயில்களில் இருந்து ரூ.445 […]

Continue Reading

ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததா?

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி (write-off) செய்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம். பிரபல பாலிவுட் நடிகையும் ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக சமீபத்தில் கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது. அதில், “நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜக-வுக்கு கொடுத்து, வங்கிக் கடன் […]

Continue Reading

முதலமைச்சர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் புதிய காரில் வலம் வந்த ரேகா குப்தா என்ற தகவல் உண்மையா?

‘’முதலமைச்சர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் புதிய காரில் வலம் வந்த ரேகா குப்தா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ முதலமைச்சராக பதவியேற்ற 48 மணி நேரத்தில் அதி நவீன சொகுசு கார் எப்படி வந்தது?? அதுவும் பேன்சி நம்பரோடு.. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒன்றிய […]

Continue Reading

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா?

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அதிஷி மற்றும் ரேகா குப்தா ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை ஒன்றாக வைத்து உருவாக்கப்பட்ட பதிவை பலரும் Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிஷி முதல்வராக இருக்கும் போது அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படம் இருந்ததையும், ரேகா குப்தா பதவியேற்ற பிறகு […]

Continue Reading

காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னதை மறந்துவிட்டாரா அண்ணாமலை?

‘’காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னதை மறந்துவிட்ட அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலையின் போலி நாடகம் அம்பலம்! திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்போது செருப்பு அணிந்து சுற்றுவது சர்ச்சையை […]

Continue Reading

கங்கனா ரனாவத் மற்றும் யோகி ஆதித்யநாத் கட்டிப்பிடித்துக் கொண்டனரா?

‘’கங்கனா ரனாவத் மற்றும் யோகி ஆதித்யநாத் கட்டிப்பிடித்துக் கொண்ட காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ BJP – #முதலமைச்சர்இவ்வளவு சலுகைகள் இருந்தால் பலருக்கு பிரம்மச்சாரியாக ஆக வேண்டும் என்று ஆசை வந்து விடும்#jegajananda Happy Wedding Anniversary ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், கங்கனா […]

Continue Reading

‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று பாஜக.,வினர் போஸ்டர் ஒட்டினரா?

‘’கெட் அவுட் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #Get out Stalin #கட் அவுட் ஸ்டாலின்காவி களப்பணியில் G. ராஜ்குமார் BA LLB., மதுரை மாவட்ட துணை தலைவர், பாஜக,’’ என்று […]

Continue Reading

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் பழைய வீடியோ இதுவா?

‘’டெல்லி பெண் முதலமைச்சரின் பழைய காணொளி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *டெல்லி பெண் முதலமைச்சரின் பழைய காணொளி**டெல்லியின் பொறுப்பு இப்பொழுதுதான் ஒரு சரியான நபரிடம் சென்று சேர்ந்துள்ளது.**இப்போது இவர்தான் டெல்லியின் முதலமைச்சர்**இனி எல்லாமே சரியாக இருக்கும்**பெண் குலத்தின் பெருமை போற்றும் பெண்மணி*’’ என்று எழுதப்பட்டுள்ளது.இதனுடன், […]

Continue Reading

திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அரசுப் பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவர் தனது கையில் சிலேட் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அதில், ‘’திராவிடமாடல் அரசே… அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை […]

Continue Reading

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆரத்தி தொடங்கப்பட்டதா?

டெல்லியில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து யமுனை நதிக்கு ஆரத்தி காட்டுவது மீண்டும் தொடங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றுக்கு ஆரத்தி எடுத்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் பாஜக ஆட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்ததைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரையில் யமுனா ஆரத்தி மீண்டும் தொடங்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

கிராமத்தை அழித்து நடிகர் விஜய் கட்டிய பள்ளிக்கூடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அழகிய பசுமையான கிராமத்தை அழித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்டிய பள்ளிக் கூடம் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயல்வெளி போன்று இருக்கும் இடம் ஒன்றின் புகைப்படம் மற்றும் பள்ளிக் கூட கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக சேர்த்து நடிகர் விஜய்யின் பள்ளி அமைவதற்கு முன்பு, கட்டிய பிறகு என்று […]

Continue Reading

“அண்ணாமலைக்கு விஜயகாந்த் நிலைதான் ஏற்படும்” என்று ஜவாஹிருல்லா எச்சரிக்கை விடுத்தாரா?

அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை இல்லை என்றால் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா கூறியது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை. ஆட்டு குட்டி அண்ணா மலைக்கு நாவடக்கம் தேவை. […]

Continue Reading

கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கழிப்பறை என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் ரூ.4000 கோடி செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறையின் நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வரிசையாகக் கழிப்பறை கோப்பைகள் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. எந்த மறைவும் இன்றி, வரிசையாக இந்த கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “4000 கோடி செலவில் உலகமே வியக்கும் பாத்ரூம் வசதியை கும்பமேளாவில் செய்த எங்கள் […]

Continue Reading

“ஜெயலலிதாவின் நகைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதாவின் நகை, சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை சொத்துக்களை […]

Continue Reading

டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டெல்லி மெட்ரோ கட்டணத்தை ரூ.60 முதல் 90 வரை உயர்த்திய பாஜக என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘டெல்லி மக்களுக்கு நல்ல நாள் முதல் பரிசு நண்பர்களே..!! மெட்ரோ கட்டணம் ₹60முதல் ₹90 வரை உயர்வு மகளிர் இலவச பேருந்து சேவை மூடல் 😄” என்று ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

‘இந்தி தெரிந்தால்தான் இந்தியன்’ என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்தி தெரிந்தால்தான் இந்தியன் – அண்ணாமலை. இந்திதான் இந்தியாவின் மூத்த மொழி. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழில் […]

Continue Reading

கும்பமேளாவில் ஜோதிர் மட சங்கராச்சாரியாரை தாக்கிய உ.பி  பாஜக அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தை காவல் துறையை விட்டு உத்தரப்பிரதேச பாஜக அரசு தாக்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரகண்ட் மாநிலம் ஜோதிர் ( அல்லது ஜோஷி) சங்கர மடத்தின் தலைவராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இவரை போலீசார் தாக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற […]

Continue Reading

இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தாரா?

‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது’’, என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது இந்துக்கள் அசைவ உணவு உண்பதால்தான் திருப்பரங்குறத்தில் ஆடு பலியிடுவதை எந்த தாக்கமும் இல்லாமல் கடந்துபோகிறோம் இனி இந்துக்கள் அசைவ உணவு உண்பதையே மத்திய அரசு தடை செய்ய […]

Continue Reading

அதிமுக.,வில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டாரா?

‘’காயத்ரி ரகுராம் அதிமுக.,வில் இருந்து அதிரடி நீக்கம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு..கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் […]

Continue Reading

‘எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எம்.எல்.ஏ மன்சூர் முகமது  திமிரைப் பாருங்கள். போலீஸின் நிலைமையே இப்படி இருக்கும் போது, பொதுமக்களின் கதி என்னவாகும்…இந்த வீடியோவை இந்தியா முழுவதும் காணும் வகையில் பகிரவும்.*’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

‘’பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம்,’’ என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் – அண்ணாமலை. இன்று என் சாட்டையடி போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னைப் பின்பற்றி, பாஜகவின் உண்மைத் தொண்டர்களும் இனி […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்திரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

‘அண்ணாமலை ஒழிக’ என்று தமிழிசை கோஷமிட்டாரா?

‘’அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   இதனை பலரும் […]

Continue Reading

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டதா?

‘’அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் பாராளுமன்றம் முழுவதும் அம்பேத்கர் 🔥😎,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

ஜார்க்கண்ட், வயநாடு தேர்தல் தோல்வியை கொண்டாடினாரா தமிழிசை?

‘’ஜார்க்கண்ட், வயநாடு, கர்நாடகா தேர்தல் தோல்வியை கொண்டாடிய தமிழிசை’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’போடுப்பா வெடிய… ஜார்க்கண்ட்டில் தோல்வி வயநாட்டில் தோல்வி கர்நாடகா அனைத்து இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அதை கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

காஷ்மீரில் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டதால் இந்து எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டார்களா?

காஷ்மீர் சட்டமன்றத்தில் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியதற்காக இந்து எம்.எல்.ஏ-க்கள் வெளியெற்றப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்த எல்லா பாஜக எம்.எல்.ஏ-க்களையும் வெளியேற்றம் செய்வது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு கட்டிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு கட்டிய ராம்பன் (Ramban) பாலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றின் கரையை ஒட்டி பிரம்மாண்ட இரண்டு தனித்தனி 2 வழி மேம்பால நெடுஞ்சாலை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அட இது வெளிநாடு இல்லைங்க, இன்றைய மோடிஜியின் ராஜ்ஜியத்தில் ஜம்மு காஷ்மீர்❤️” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மதவெறி காரணமாக முஸ்லீம் நபரின் தாடியை பிடித்து இழுக்கும் இந்தியர் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’மதவெறி காரணமாக முஸ்லீம் நபரின் தாடியை பிடித்து இழுக்கும் இந்தியர்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இந்தியா வல்லரசு ஆயிடுச்சு* ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️  _ஆரிய வந்தேறி பார்ப்பனியம் எந்த அளவிற்கு மதவெறியை ஊட்டி வளர்த்திருக்கிறது பார்த்தீர்களா_ ❓’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்திய போது “மோடி” கோஷம் எழுப்பப்பட்டதா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டிரம்ப் உரையாற்றிய போது அவரது கட்சியினர் மோடி மோடி என்று கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பேசும் போது சிலர் கோஷம் எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க தேர்தல் வெற்றி விழா..முதல் உரையில் டிரம்ப் பேசும் […]

Continue Reading

‘பிராமணர்களின் எழுச்சி.. தமிழகத்தில் முதல்முறை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை…👌🙏🙏திராவிட திருடர்களை விரட்டுவோம் தமிழகத்திலிருந்து@HRajaBJP@umaanandansays@imkarjunsampath#tnbjp #bjptamilnadu#HRaja #BJP #Annamalai,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சிக்கிய பாஜக பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

மகாராஷ்டிரா மாநில பாஜக-வின் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜகவிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? கடவுளே மகாராஷ்டிரா: சரத் பவார் குழு தலைவர் ரோஹித் பவார் பண வீடியோ டுவிட்… ◆ ரோஹித் சொன்னார், “தேர்தலின் முதல் தவணையாக […]

Continue Reading

சந்திர மண்டலமாக மாறிய குமரி மாவட்ட சாலைகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குமரி மாவட்டத்தின் சாலைகள் குண்டும் குழியுமாக சந்திரமண்டலம் போல இருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குண்டும் குழியுமாக உள்ள ஏராளமான சாலைகளின் புகைப்படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#சந்திரமண்டலமாக மாறிய #குமரி மாவட்ட சாலைகள்……” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading

‘மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல’என்று மோடியை விமர்சித்தாரா குஷ்பு?

‘’மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல’’ என்று மோடி பற்றி குஷ்பு விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ என்னக்கா ஜி மேலயே அட்டாக்கா😱😱!’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் நியூஸ் கார்டு ஒன்றையும் இணைத்துள்ளனர். அதில், ‘’என்னை பொறுத்த வரை.. மனைவியை விட்டுச் செல்பவன் […]

Continue Reading

முஸ்லிம் முதியவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மோடியின் இந்தியாவில் முஸ்லிம் என்பதற்காக முதியவர் ஒருவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive இஸ்லாமிய முதியவர் ஒருவரை நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தாக்கும் வீடியோ எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் இந்தியாவில் முஸ்லீமாக இருப்பது சாபமாகிவிட்டது – இந்த இந்துத்துவா குண்டர் ஒரு முஸ்லீம் என்பதற்காக கண்ணாடியை உடைத்து […]

Continue Reading

வந்தே பாரத் ரயில் கண்ணாடியை உடைக்கும் நபர்; உண்மை விவரம் என்ன?

‘’வந்தே பாரத் ரயில் கண்ணாடியை உடைக்கும் இந்த நபரை தண்டிக்க வேண்டும்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ *நமது தேசத்தின் வந்தே பாரத் ரயிலை சுத்தியல் மூலம் உடைக்கும் இவன் யார் 👆👆👆😡😡* கண்டுபிடித்து தண்டிக்குமா காவல்துறை😅😅😅😅😅,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் […]

Continue Reading

லட்டு புனிதப்படுத்தும் சடங்கு புகைப்படத்தை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகள்!

திருப்பதியில் லட்டை புனிதப்படுத்தும் சடங்கின் ஒரு பகுதியாக புனித நீர் தெளித்தபோது எடுத்த புகைப்படத்தை அசைவ உணவுகளுக்கு புனித நீர் தெளித்தது போன்று சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அசைவ உணவுகள் மீது புனித நீர் தெளிப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுடே சேலம் செல்வி மெஸ் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

‘நரேந்திர மோடி மைதானத்தில் ஷவர் பாத்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மழை நீர் கொட்டும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive 1 I Facebook I Archive 2 விளையாட்டரங்கம் ஒன்றில் நாற்காலிகள் மீது மழை நீர் கொட்டும் வீடியோ எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் வாங்கினால் இலவச […]

Continue Reading

சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாரா?

‘’சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் ‘’BIG BREAKINGS NEWS !!! ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ND கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள TDP கட்சியின் இரு அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டார். […]

Continue Reading

‘குஜராத் வெள்ளம் – மண்ணில் புதைந்த வாகனங்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’குஜராத் வெள்ளம் – மண்ணில் புதைந்த வாகனங்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் மோடி ‘’பாஜக ஆட்சியில் சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது,’’ என்று பேசுகிறார். அதன் பின்னணியில் சாலை ஒன்றின் நடுவே, ஜேசிபி வாகனம், வேன் என வாகனங்கள் பலவும் புதையுண்டு நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. Claim […]

Continue Reading

‘இந்துக்களை காக்கும் ஆர்எஸ்எஸ்’ என்று அஜித் தோவல் பதிவிட்டாரா?

இஸ்லாத்திடமிருந்து இந்துக்களை ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பதிவிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அஜித் தோவல் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் தொடர்பான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், இஸ்லாம் என்ற வெள்ளத்தைத் தடுத்து இந்துக்களை காக்கும் தடுப்பாக ஆர்.எஸ்.எஸ் இருப்பது போன்று ஓவியம் சித்தரிக்கப்பட்டுள்ளது. “The Flood […]

Continue Reading

‘நரேந்திர மோடி ஆட்சியில் மோசமான சாலைகள்’ என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

நரேந்திர மோடி ஆட்சியில் வளர்ச்சி என்று மிக மோசமான சாலையில் வேன் ஒன்று செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I x.com I Archive குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் மிக மோசமான சாலையில் வேன் ஒன்று பயணிகளுடன் வரும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் வளர்ச்சி நண்பர்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading