
‘’உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 99 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு,’’ என ஒரு செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதிய தலைமுறை லோகோவில் இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருவதால், உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த தொலைக்காட்சியில் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், ‘’புதிய தலைமுறை பெயரில் பகிரப்படும் போலியான செய்தி இது,’’ எனக் குறிப்பிட்டார்.
எனவே, அடுத்தப்படியாக, மத்திய அரசின் பொது பட்ஜெட் 2021-22 பற்றிய அறிக்கை, செய்திகளை பார்வையிட்டோம். அதில், தாஜ் மஹால் இப்படி 99 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்பட்டதாக எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
India Govt Budget 2021-22 Speech PDF Link
எனவே, தாஜ்மஹால் பற்றியும், மத்திய அரசின் 2021 பட்ஜெட் பற்றியும் தவறான தகவல் பரப்பும் நோக்கில் இந்த போலியான செய்தியை புதிய தலைமுறை லோகோவுடன் தயாரித்து, பகிர்ந்துள்ளனர் என்று சந்தேமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தாஜ் மஹால் 99 ஆண்டுகள் ஒத்திக்கு விடப்பட உள்ளதாக பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
