
‘’தனக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துரை சோதனை நடக்கும் வேலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கே.என்.நேரு நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு
திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரின் சகோதரருக்கு சொந்தமான நிறுவனங்களில் ரெய்டு நடக்கும் வேளையில்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை டெல்லியில் சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
தந்தி டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என்று தெரியவந்தது.
ஆம், உண்மையான நியூஸ் கார்டில், ’’ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக அமைச்சர் கே.என்.நேரு!,’’ என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
உண்மையான நியூஸ் கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
இதன்மூலமாக, தந்தி டிவி பெயரில் வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:கே.என்.நேரு மற்றும் நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Written By: Pankaj IyerResult: Altered


