‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்,’’ என்றும், ‘’ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்,’’ என்றும் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் 3 வீடியோக்கள் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இதனை தேனி மாவட்டம் என்று சிலரும், ஆந்திராவில் என்று சிலரும் கூறி, தகவல் பகிர்கின்றனர்.

இது தவிர, இந்த ஓநாய் போன்ற விசித்திர மிருகங்கள் கடித்து, பலர் காயமடைந்ததாகவும் கூறி, ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவையும் பகிர்கின்றனர். அதற்கான ஸ்கிரின்ஷாட்டை கீழே இணைத்துள்ளோம்.

இதுதவிர தென்னாப்ரிக்கா மற்றும் இதர நாடுகளிலும் இந்த ஓநாய் போன்ற விசித்திர வீடியோவை பரப்பி வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இதன்படி, விசித்திர மிருகம் அல்லது ஓநாய் என்று கூறி பகிரப்படும் வீடியோக்கள், கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டதாகும். அவற்றுக்கும் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

https://twitter.com/SWinstonSchool/status/1419782329338318860

இது உண்மையில் Joseph- Rob Cobasky என்ற SFX sculpture artist செய்த பொம்மையாகும். அந்த பொம்மைக்கு கிராபிக்ஸ் முறையில் உயிரூட்டி, அந்த வீடியோவை தயாரித்துள்ளனர். பார்ப்பதற்கு உண்மையான ஓநாய் போல இருப்பதால், பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர்.

இதற்கடுத்தப்படியாக, விசித்திர மிருகம் கடித்து பொதுமக்கள் காயமடைந்ததாகக் குறிப்பிட்டு பகிரப்படும் வீடியோ/ புகைப்படம் உண்மையில் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்ததாகும். அது வேறொரு விபத்து தொடர்பானது.

இதுபற்றி ஆந்திர அரசு ஏற்கனவே விளக்கம் அளித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

எனவே, முற்றிலும் தொடர்பில்லாத வீடியோக்களை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி, விசித்திர மிருகம் கடித்து பொதுமக்கள் காயம், என்று வதந்தி பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்?- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை!

Fact Check By: Pankaj Iyer

Result: False