FactCheck: அர்ஜூன் சம்பத் மாரிதாஸ்க்கு ஆதரவாக போராட்டம் அறிவித்தாரா?
‘’மாரிதாஸ் கைதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் என்று அர்ஜூன் சம்பத் அறிவிப்பு,’’ என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
‘’மாரிதாஸ் கைது செய்யப்பட்ட கண்டித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உண்ணாவிரதப் போராட்டம்,’’ எனும் தலைப்பில் மேற்கண்ட செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் வெளியிட்ட காரணத்திற்காக, மாரிதாஸை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
puthiyathalaimurai link I bbc tamil link
இதையொட்டி, அர்ஜூன் சம்பத் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் மேற்கண்ட செய்தியை பலரும் ஷேர் செய்கின்றனர். ஆனால், உண்மையில், இதனை போலிச் செய்தி என்று, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு கூறியுள்ளது.
இதேபோல, இந்து மக்கள் கட்சியும் இதனை போலியான செய்தி எனக் கூறி, ட்வீட் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:அர்ஜூன் சம்பத் மாரிதாஸ்க்கு ஆதரவாக போராட்டம் அறிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False