‘’மேடையில் இருந்து கீழே குதித்த அன்புமணி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நம்ம மேங்கோமணி தான் பாஜக கதையை முடிச்சி விட போறாரு 🤣🤣,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இந்த வீடியோ கடந்த 2023ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒன்று, என தெரியவந்தது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக சார்பாக நடைபெற்ற விழா ஒன்றில் இவ்வாறு மேடை சரிந்து விழுந்ததாகவும், விவரம் கிடைத்தது.

இதுதொடர்பாக ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது.

ABP Live Tamil l Indian Express Tamil l Maalaimalar

எனவே, 2023ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோவை எடுத்து, தற்போதைய 2024 மக்களவைத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி, தேவையற்ற வதந்தி பரப்புகின்றனர், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘மேடையில் இருந்து கீழே குதித்த அன்புமணி’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISSING CONTEXT