‘’ அதிமுக மகளிர் அணியினருக்கு தரையில் சோறு போட்ட எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Tweet Claim Link l Archived Link

இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாடினார். இதையொட்டி, அக்கட்சி சார்பாக தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதையொட்டி, சென்னையில் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


News18 Tamil link l Oneindia Tamil Link

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்தே மேற்கண்ட வகையில், வேண்டுமென்றே வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தரையில் சோறு போட்டு யாரையும் அவமானப்படுத்தவில்லை. இது அதிமுக மகளிர் அணியினரின் வேண்டுதல். அவர்கள் விரும்பித்தான் இவ்வாறு செய்தனர்.

மேலும், குறிப்பிட்ட ட்விட்டர் ஐடி ஆதன் தமிழ் மாதேஷ் பெயரில் செயல்படும் போலியான ஒன்றாகும். இவர் இதுபோல அவ்வப்போது வதந்தி பரப்பி வருகிறார். இதுபற்றி நாமும் செய்தி வெளியிட்டு வந்திருக்கிறோம். அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் இதுவும். ஆதன் தமிழ் மாதேஷின் உண்மையான ஐடி லிங்க் இங்கே இணைக்கப்பட்டுளளது.

கூடுதல் ஆதாரத்திற்காக நாம் மாதேஷ் தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.


Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2 l Fact Crescendo Tamil Link 3

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அதிமுக மகளிர் அணியினரை தரையில் சாப்பிட வைத்த எடப்பாடி பழனிசாமி என்று பகிரப்படும் வதந்தி…

Written By: Fact Crescendo Team

Result: False