
‘’திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 140 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானியின் புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ நம் Air India விமான ஓட்டுநருக்கு பாதம் பணிந்த நன்றிகள் 🙏👍🇮🇳🫡
#AirIndiaExpress
144 பயணிகளையும் பத்திரமாக மீட்ட இந்த விமானிக்கு பாராட்டுக்கள் 👏✈️🪷🇮🇳’’, என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த புகைப்படத்தில் உள்ள நபரின் பெயர் Rakesh Kumar Rana என்று தெரியவந்தது. இவர், கடந்த செப்டம்பர் 2, 2024 அன்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே அரபிக் கடலில் விபத்துக்குள்ளான இந்திய கடலோர காவல்படையின் ALH MK-lll ரக ஹெலிகாப்டரின் பைலட். குறிப்பிட்ட விபத்தில் ராகேஷ் உயிரிழந்த நிலையில் அவரது உடல் பாகங்கள், நீண்ட தேடுதலுக்குப் பிறகே மீட்கப்பட்டன.
இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது.
Indian Express l PIB l India Today
இவரது புகைப்படத்தை எடுத்து, திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்ட நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள்.
Hindustan Times l NDTV l Indian Express l Puthiyathalaimurai TV
திருச்சி நிகழ்வுடன் தொடர்புடைய விமானி Iqrom Rifadly Fahmi Zainal மற்றும் துணை விமானி Maitryee Shrikrishna Shitole ஆகியோரின் புகைப்படம் இதோ…
இவர்களது புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி இவரா?
Fact Check By: Pankaj IyerResult: False
