பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி கைது என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி பயங்கரவாதி அப்துல் சலிம் கைது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி பயங்கரவாதி அப்துல் சலிம் கைது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒருவரது புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. 

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

சமீபத்தில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

Livemint Link l ABPlive Link 

மேலும், இதுதொடர்பாக ஆதாரமற்ற தகவல்கள், வதந்திகள் எதையும் பரப்பக் கூடாது என்றும் ஏற்கனவே பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, சலீம் என்ற பெயரில் யாரும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது. 

அதேசமயம், குறிப்பிட்ட படத்தில் இருக்கும் நபர் யார் என்று தகவல் தேடினோம். அப்போது, தெலுங்கானா மாநிலத்தில், (தடை செய்யப்பட்ட) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் சமீபத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதாக, விவரம் கிடைத்தது. அவரது புகைப்படத்தை எடுத்தே, பெங்களூ குண்டுவெடிப்புடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள் என்றும் தெரியவருகிறது. 

மேலும் ஒரு செய்தி ஆதாரம் இதோ…

The Hindu Link  

எனவே, தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட PFI அமைப்பைச் சேர்ந்த ஒருவரது புகைப்படத்தை எடுத்து, பெங்களுரு குண்டுவெடிப்புடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி கைது என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False