திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதி கிடையாது என்று ஓயோ அறிவித்ததா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’திருமணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி கிடையாது,’’ என்று ஓயோ அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’OYO செக்-இன் விதிகள் மாற்றம். ’ திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி மறுப்பு..!

திருமணமான உரிய ஆதாரங்களோடு 

வருவோருக்கு மட்டுமே இனி அனுமதிக்கப்படுவதாக தகவல்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

தந்தி டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இதன்படி, ஓட்டல் முன்பதிவு செய்யும் சேவை வழங்கும் ஓயோ நிறுவனம் மீரட் நகருக்கு மட்டும் முதல்கட்டமாக, இதுபோன்று செக்-இன் விதிமுறையை மாற்றம் செய்துள்ளதாக, தெரியவந்தது. இந்த நடைமுறைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்தியா முழுக்க விரிவுபடுத்தவுள்ளதாக, ஓயோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PTI News 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Hindustan Times l Times of India l The Hindu

ஆனால், இதனை தவறாக அர்த்தப்படுத்தி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஓயோ புதிய செக்-இன் விதிமுறையை கொண்டுவந்துள்ளதாக, பல்வேறு ஊடகங்களும் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்பேரில் சமூக வலைதள பயனாளர்களும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் முழு உண்மையல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதி கிடையாது என்று ஓயோ அறிவித்ததா?

Fact Check By:  Pankaj Iyer 

Result: MISSING CONTEXT