‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே அந்த சிலையை நிறுவிய பஞ்சாப் மாநில நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த வீடியோ செய்தியில், ‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே நிறுவிய பஞ்சாப் மாநில நபர்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். முதலில், இந்த படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு சில ஆதாரங்கள் கிடைத்தன.

ANI News பெயரில் நகைச்சுவைக்காக, AIN (Parody) என்ற ட்விட்டர் ஐடி செயல்படுகிறது. அந்த ஐடி சார்பாக, ‘’Just In: Man from Punjab installs Statue of Liberty on his rooftop after his US visa application gets rejected 🚨’’ என்று தலைப்பிடப்பட்டு, கிண்டலாக பகிரப்பட்ட வீடியோ செய்திதான் இது.

AIN (Parody) Tweet Link

இதனை பலரும் ANI வெளியிட்ட உண்மையான செய்தி என்று நினைத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாலிமர் டிவி செய்தியும்…

உண்மையில், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், இவ்வாறு சிலை நிறுவப்படவில்லை. பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊரில் வீடு கட்டும்போது, மாடியில் தாஜ் மஹால், சுதந்திர தேவி சிலை, விமானம், கால்பந்து மைதானம், ராக்கெட், டிராக்டர் போன்று வித விதமான வடிவில், தங்களின் விருப்பத்திற்கேற்ப நிறுவுவது வழக்கம்.

இந்த வரிசையில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சுதந்திர தேவி சிலை தகவலும்…

இதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் மோகா மாவட்டத்தில் உள்ள Tarn Taran என்ற கிராமத்தைச் சேர்ந்த Gurmeet Singh Brar என்பவர் அமெரிக்காவில் வேலை கிடைத்து, அங்கேயே செட்டில் ஆகியுள்ளார். தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் நன்றாக வாழ, வழி காட்டிய அமெரிக்காவுக்கு நன்றி செலுத்தும் வகையில் சொந்த ஊரில் அவர் கட்டும் வீட்டின் மொட்டை மாடியில் சுதந்திர தேவி சிலையை நிறுவியுள்ளார்.

இவர் மட்டுமல்ல, இவருக்கு முன்பாக ஏற்கனவே ஒருவர் ஜலந்தர் மாவட்டத்தில் இதேபோன்று வீட்டின் மாடியில் சுதந்திர தேவி சிலையை நிறுவியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Indianeagle Link l Indiatvnews Link

எனவே, ‘விசா கிடைக்காத விரக்தியில் சுதந்திர தேவி சிலையை வீட்டிலேயே நிறுவிய நபர்,’ என்று பரவும் தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:விசா கிடைக்காத விரக்தியில் சுதந்திர தேவி சிலையை வீட்டிலேயே நிறுவிய நபர் என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING