‘’ரிஷி சுனக் தோற்ற பிறகு, மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் கருப்புப் பணம் பட்டியலை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இதுதான் இவங்க தேச பக்தி

*⭕✍🏻✍🏻..பிரிட்டனில் அதிகாரம் மாறிய உடனேயே வெளிப்பாடுகள் வெளிவர ஆரம்பித்தன*

*ரிஷி சுனக்* தோற்ற பிறகு, *மோடி மற்றும் அவரது அமைச்சர்களின்* கருப்பு பணம் அம்பலமானது. மோடியின் அமைச்சர்களின் கருப்புப் பணம் 14 ஆண்டுகளில் நூறு மடங்கு அதிகரித்துள்ளது

பிரித்தானியாவின் ரகசிய வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

முதல் *24 பெயர்கள்* பின்வருமாறு.

*(டாலரில் தொகைகள்)*

*1 - நரேந்திர மோடி* (56800000000000)56.8 லட்சம் கோடி (LkCr) usd=R.4089 LkCr

*2 - அமித் ஷா*

(7800000000000)0.78 LkCr USD, ரூ 56 LkCr

*3 - ஸ்மிருதி ஜூபியன் இரானி*

(158000000000000) 15.8 LkCr USD, Rs1136 LkCr

*4 - ராஜ்நாத் சிங்*

(8200000000000)8.2 LkCr USd, Rs590 LkCr

*5 - ஜெய் ஷா*

(15400000000000)15.40

LkCr USD

*6 - அனுராக் தாக்கூர்* (2890000000000)2.89 LkCr USD, Rs208LkCr

*7 - நிர்மலா சீதாராமன்*

(9000000000000) 0.9LkCr USD, Rs64.8LkCr

*8 - பியூஷ் கோயல்* (15000000000000)1.5LkCr USD, Rs108LkCr

*9 - கிரிராஜ் சிங்* (75000000000000)7.5LkCr USD, Rs540LkCr

*10 - அஷ்வனி வைஷ்ணவ்* (28000000000000)2.8LkCr USd, Rs201LkCr

*11 - ஜோதிராதித்ய சிந்தியா* (5900000000000) 0.59LkCr USd, Rs42.4LkCr

*12 - டாக்டர் மன்சுக் மாண்டவியா* (220000000000000) 22LkCr USD, Rs1584Lk

*13- ஜகத் பிரகாஷ் நத்தா* (7688800000000)7.6LkCr usd, Rs167.2LkCr

*14- ஷிராஜ் சிங் சௌஹான்* (58211400000000)58.2LkCr USD, ரூ 4190LkCr

*15- மனோகர் லால் கட்டார்*

(19800000000000)1.9LkCr USD, Rs137LkCr

*16- கிரன் ரிஜிஜு* (13580000000000)13.6LkCr USD, Rs976LkCr

*17- ஜெனரல் வி.கே.சிங்* (820000000000)0.82LkCr USd, Rs59LkCr

*18- அர்ஜுன் ராம் மேக்வால்* (1450000000000)1.45LkCr USD, Rs104LkCr

*19- மீனாட்சி லேகி* (2890000000000)

2.9LkCr USd, Rs209LkCr

*20 - கேசவ் பிரசாத் மௌரியா* (9000000000000) 0.9LkCr USD, Rs64.8LkCr

*21- தேவேந்திர ஃபட்னாவிஸ்* (15000000000000)1.5LkCr USD, Rs108LkCr

*22- யோகி ஆதித்ய நாத்* (3500000000000)3.5LkCr USD, Rs252LkCr

*24. சஞ்சீவ் குமார் பல்யான்* (189008000000000)18.9LkCr USd, Rs1360LkCr

*நல்லது! 🤔

*அனைத்து தேசபக்தர்களே!*,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று தகவல் தேடினோம். எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை. அடுத்தப்படியாக, விக்கிலீக்ஸ் இப்படி எதுவும் பட்டியல் வெளியிட்டுள்ளதா என்று அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://wikileaks.org/) சென்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் காண கிடைக்கவில்லை.

அதேசமயம், கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் இருந்துதான் பெருமளவு கருப்புப் பணம் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுவதாக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே குறிப்பிட்டிருந்ததாக, செய்திகள் கிடைத்தன. ஆனால், வேறு எந்த பட்டியலும் காணவில்லை.

Economic Times Link

இதுதவிர காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள கருப்புப் பணம் பற்றிய பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகக் கூறி, ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தகவல் பரவியது.

ஆனால், இந்த தகவல் பரவிய உடனே, அசாஞ்சே மற்றும் விக்கிலீக்ஸ் சார்பாக, மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது.

WikiLeaks FB Post Link I WikiLeaks Tweet Link

இதே தகவலை எடுத்து, இதில் உள்ள பெயரை மட்டும் எடிட் செய்து, பாஜக நபர்களின் பெயரை சேர்த்து, புதியது போல மீண்டும் வதந்தி பரப்புகிறார்கள் என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் கருப்புப் பணம் பட்டியலை விக்கி லீக்ஸ் வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False