ஜூலை 2, 2018ல் மும்பையில் பேசும்போது, சிறுபான்மை நலத்துறை யூனியன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள், “ இந்தியாவில் கடந்த 4 வருடங்களில் எந்த ஒரு பெரிய அளவிலான வகுப்பு கலவரம் நடைபெறவில்லை” என்று கூறினார்
Refer: / சரி பார்க்கவும்:

https://www.hindustantimes.com/india-news/no-big-communal-riot-in-india-in-last-four-years-says-mukhtar-abbas-naqvi/story-6rFbli692M8OmgtJoioRwN.html

உள்துறை மந்திரி சபையின் தகவல்களின் இந்தியாஸ்பென்ட் ஆய்வின்படி பாரதிய ஜனதா பார்டி தலைமையின் கீழ் உள்ள தேசிய டெமாக்ரடிக் அலையன்ஸ் அரசின் கீழ் வகுப்பு கலவரங்கள் கடந்த மூன்று வருடங்களிலிருந்து 2017 வரை அதிகமாகி உள்ளது – அந்த வருடத்தில் 822 “சம்பவங்கள்” பதிவாகியுள்ளன – ஆனால் அது 2008ல் பதிவான பத்தாண்டு கால அதிகமான 943ஐ விட குறைவே

சரி பார்க்கவும்
https://www.business-standard.com/article/current-affairs/communal-violence-increases-28-under-modi-govt-yet-short-of-upa-high-118020900128_1.html

தகவல் சேகரிப்பது ஒரு முக்கிய சவாலாக இருப்பினும் உண்மை நிகழ்வுகள் வித்தியாசமாக தெரிவிக்கின்றன. வகுப்பு கலவரங்கள் சில மாநிலங்களில் சிறிய அளவில் அதிகமாக இருந்தாலும் உத்திர பிரதேசன் போன்ற மாநிலங்களில் அவை சீரான அளவில் அதிஆகி கொண்டிருக்கிறது.

கடந்த 4 வருடங்களில் ஏற்பட்ட வகுப்பு கலவரங்கள் / நிகழ்வுகள்
சஹாரான்பூர், உத்திர பிரதேசம் , ஜூலை 25, 2014.
பல்லாபார்க், ஹரியானா, மே, 25, 2015
வட கர்நாடகம் (முதோல்,சிக்கோடி,சுர்பூர்,தார்வாட்,கௌஜலகி,பெல்காம்) செப்டம்பர் 23-28, 2015
நடியா,மேற்குய் வங்காளம்,மே 5, 2015.
மால்டா, மேற்கு வங்காளம் ஜனவரி 3, 2016.
ஹசிநகர், மேற்கு வங்காளம்

அக்டோபர் 12, 2016.
துலாகர்,மேற்கு வங்காளம், டிசம்பர் 13, 2016.
சஹாரான்பூர், உத்திர பிரதேசம் , மே, 5, 2017.

பதுரியா மேற்கு வங்காளம் ஜூலை 4, 2017
முசாஃபர் நகர் உத்திர பிரதேசம் செப்டம்பர் 7, 2017.
பீமா கொரேகான், புனே,மகாராஷ்டிரா,ஜனவரி 1, 2018.
கஸ்கஞ் உத்திர பிரதேசம் ஜனவரி 26, 2018

நாடு முழுவதும் ஏற்படும் குற்றங்களை பற்றிய பதிவுகளை உள்துறை மந்திரிசபையின் ஒரு பாகமான தி நேஷனல் க்ரைம் ரெகார்ட்ஸ் பியுரோ (NCRB) சேகரித்து பராமரிக்கிறது. கலவரங்கள் அனைத்தும் IPC குற்றப்பிரிவு 147 முதல் 151 வரை பதிவு செய்யப்படுகின்றன மற்றும் மதம். இனம் மற்றும் பிறப்பிடம் குறித்து தூண்டப்படும் விரோதத்தை IPCயின் 153A கீழ் பதிவு செய்யப்படுகிறது.

2016ல் 61974 கலவரங்கள் IPCயின் 147 முதல் 151 வரையிலான குற்றப்பிரிவுகளின் கீழ் மற்றும் IPCயின் 153A குற்றப்பிரிவின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றும் சமீபத்திய NCRBயின் தகவலின்படி 2014ல் நடந்ததை விட 66042லிருந்து 6% குறைவாக உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் 2014 மற்றும் 2016ல் 2885 வகுப்பு கலவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று NCRB தகவல் தெரிவிக்கிறது.