ஆபத்தான அரசியல் பேசும் சீமான் என்று வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்தாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’ஆபத்தான அரசியல் பேசும் சீமான்’’, என்று இயக்குனர் வெற்றிமாறன் கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார்! தந்தை பெரியாருக்கு எதிராக சீமான் அவதூறு பரப்புவது மிகவும் மோசனமாது; அவரின் போக்கு கவலையும் அதிர்ச்சியும் தருவதாக உள்ளது; ஆபத்தான அரசியல் பேசுகிறார்
அவரின் செயல்பாடுகள் தமிழர், தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது – இயக்குனர் வெற்றிமாறன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2   

News 18 தமிழ்நாடு லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது News18 தமிழ்நாடு பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று, என தெரியவந்தது. இதுதொடர்பாக, அந்த ஊடகத்தின் ஆசிரியர் குழுவினரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

அடுத்தப்படியாக, வெற்றிமாறன் சீமான் பற்றி ஏதேனும் கண்டனம் தெரிவித்துள்ளாரா என்று தகவல் தேடினோம். அவ்வாறு எந்த செய்தியும் காணப்படவில்லை. அதேசமயம், சீமானை பாராட்டி, வெற்றிமாறன் பேசியுள்ளதாகவே, செய்திகள் கிடைத்தன. 

இதேபோன்று, சில நாட்கள் முன்பாக, வெற்றிமாறனுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்ததாகவும், செய்திகள் கண்டோம். 

Nakkheeran Link l Maalaimalar Link 

தொடர்ந்து, நாம் தகவல் தேடியபோது, ‘’ஆபத்தான அரசியலை பேசுகிறார் சீமான்,’’ எனும் கருத்தை தெரிவித்த நபர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தான் என்று விவரம் கிடைத்தது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

ABP Nadu l Velicham TV l Puthiyathalaimurai Link 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஆபத்தான அரசியல் பேசும் சீமான் என்று வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False