வட இந்தியாவில் தனது மகளை திருமணம் செய்த முதியவர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பிரம்மா தன் மகள் சரஸ்வதியை திருமணம் செய்தது போல, நானும் என் மகளைத் திருமணம் செய்துகொண்டேன்,’’ என்று வட இந்திய பண்டிட் ஒருவர் கூறியதாக வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்வது போன்று திருமணம் செய்வது போன்று புகைப்படம் மற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் இந்தியில் […]

Continue Reading

பெரியாரை புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகிசிவம் கூறினாரா?

பெரியாரைப் புரிந்துகொள்ளாத எந்த இந்துவும் ஞானம் அடைய முடியாது என்று பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுகி.சிவம் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் படங்களை இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது! – சுகி.சிவம்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டிருந்தது. […]

Continue Reading

FACT CHECK: சமூக ஊடகங்களில் போலி படங்கள் விவகாரம்… பெரியார், சீமான் படத்துடன் நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

சமூக ஊடகங்களில் போலி, எடிட் செய்யப்பட்ட படங்கள் பகிரப்படுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரிவிட்டது தொடர்பான செய்திக்கு பெரியார் மற்றும் பிரபாகரனுடன் சீமான் நிற்கும் புகைப்படங்களை வைத்து சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டை வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதில் எது உண்மை என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் வெளியிட்ட […]

Continue Reading

FactCheck: பெண்களுக்கு பெரியார் 1951-ல் சொன்ன அறிவுரை என்று கூறி பகிரப்படும் வதந்தி…

‘’05.12.1951 அன்று குடியரசு நாளிதழில் பெரியார் பெண்களுக்கு சொன்ன அறிவுரை,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையா, என்று சிலர் சந்தேகம் கேட்க, இதனை பகிர்ந்தவர் உண்மைதான் என்று ஆமோதித்து கமெண்ட் பகிர்ந்துள்ளதையும் காண முடிகிறது. இது தவிர, இன்னொரு ஃபேஸ்புக் வாசகர் இந்த பதிவுக்கான ஆதாரம் என்று கூறி […]

Continue Reading

1953, மே மாதம் 11-ந் தேதி வெளியான விடுதலை நாளேட்டில் காமம் பற்றி பெரியார் எழுதினாரா?

‘’காமத்தை அடக்கவில்லை எனில் உன் தாய், மகளிடம் அதை தீர்த்துக் கொள்,’’ என்று பெரியார் கூறியதாக, ஒரு தகவல் நீண்ட நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், பெரியார் திருமணக் கோலத்தில் நடந்து வரும் புகைப்படம் ஒன்றையும், அதன் மேலே, அவர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் […]

Continue Reading

பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டு கதறி அழுத வைகோ! – விஷம வீடியோ

பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டு ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்ணீர்விட்டு அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அழும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பெரியார் சிலை அவமதிப்பை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் வைகோ.. பெரியார் சிலை அவமதிப்பை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் வைகோ.. கடவுள் […]

Continue Reading

பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசப்பட்டதா?

பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பெரியார் சிலை என நினைத்து… வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசிய சங்கிகள். கருத்துதான் குருடு என்றால் கண்ணுமாடா குருடு. தமிழகரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

Fact Check: பெரியார் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் விஷமத்தனமான தகவல்!

மகளைத் தொட்டிலிலும், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய தலைவர் பெரியார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தையுடன் பெரியார் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மகளை தொட்டிலிலும் பின், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய ஒரே தலைவன்டா எங்க பெரியார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎பாஜக இளைஞர் அணி – தமிழ்நாடு BJYM TamilNadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா?

தமிழ்நாட்டில் மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெரியார் பேத்திகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையில் தமிழகத்தில்தான் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் கையில் மது பாட்டிலுடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில் “கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி. பெரியார் பேத்திகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sathya Bala என்பவர் 2020 […]

Continue Reading

பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்- கி.வீரமணி பெயரில் பரவும் வதந்தி

‘’பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்,’’ என்று கி.வீரமணி சொன்னதாகக் கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவை உண்மை என நம்பி பலர் ஷேர் செய்வதையும், கமெண்ட் செய்வதையும் காண முடிகிறது. உண்மை அறிவோம்: இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் வெளியாகியுள்ளதால், முதலில் இது உண்மையா இருக்குமோ என்ற சந்தேகத்தில், […]

Continue Reading

பெரியார் படத்தை வெளியிட இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு ரஜினி உதவினாரா?

பெரியார் படம் வெளிவர வேண்டும் என்று ரஜினிகாந்த் தனக்கு பணம் கொடுத்து உதவினார் என்று இயக்குநர் வேலு பிரபாகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயக்குநர் வேலு பிரபாகரன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் படத்துக்கு பைனான்ஸ் செய்த பெரியாரிஸ்ட் கூட வட்டிக்கு வட்டிபோட்டு, என் வீட்டை எழுதி வாங்கிட்டான்க. […]

Continue Reading

பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்பதை கி.வீரமணி ஒப்புக் கொண்டாரா?

‘’பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்று கி.வீரமணி ஒப்புக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  மாரிதாஸ் காணொளிகள் இந்த வீடியோவை கடந்த ஜனவரி 21ம் தேதியன்று வெளியிட்டுள்ளது. இதில், வீரமணி, ‘’பெரியார் ராமரை செருப்பால் அடித்த பின் திமுகவுக்கு 183 இடங்களில் வெற்றி கிடைத்தது,’’ என்று பேசுகிறார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் கிடையாது என்று ரஜினி கூறினாரா?

“மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினி படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த் அதிரடி! மிரட்டிய உடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் […]

Continue Reading

பெரியார் – மணியம்மை திருமண புகைப்படம் இதுவா?

‘’பெரியார்- மணியம்மை திருமணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Murugesh Mudhaliyar என்பவர் ஜனவரி 22, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில் பெரியார் முன் பெண் ஒருவர் மாலை அணிந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பொண்டாட்டிக்கு தாலி கட்டாதே.. அது பெண் அடிமைத்தனம்னு சொல்லி, மகளுக்கு தாலி கட்டிய […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்: ஃபேஸ்புக் வதந்தியால் திடீர் பரபரப்பு

‘’நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  அன்புசெல்வன் அன்பு எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர அதேசமயம், சிலர் இது தவறான செயல் என்று கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி […]

Continue Reading

அர்ச்சகர்களை வைத்து பெரியார் ஃபவுண்டேஷன் பூமி பூஜையா?

அர்ச்சகர்களை வைத்து, யாகம் செய்து பெரியார் ஃபவுண்டேஷனுக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வெள்ளை வேட்டி மற்றும் கருப்பு நிற சட்டை அணிந்த பலர் யாக சாலையில் அமர்ந்துள்ளனர்.  ஒருவர் மட்டும் காவி வேட்டி அணிந்துள்ளார். சில பெண்களும் கருப்பு புடவையில் உள்ளனர். படம் தெளிவின்றி உள்ளது. இதனால், படத்தில் உள்ளவர்கள் யார் […]

Continue Reading

பெண்களை பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்படி பெரியார் சொன்னாரா?

‘’பெண் விடுதலை பெற வேண்டுமெனில் பல ஆண்டுகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள் என்று பெரியார் சொன்னார்,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Praveen Marutham என்பவர் ஜூலை 2, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பெரியார் சொன்னதாகக் கூறி, ‘’பெண்களுக்கு விடுதலை வேண்டுமானால் நான் சொல்வதைக் கேள். முதலில், நீ […]

Continue Reading

26 வயதான மணியம்மையை பெரியார் திருமணம் செய்தார்: ஃபேஸ்புக் கலாட்டா

26 வயது வளர்ப்பு மகளை திருமணம் செய்துகொண்ட 72 வயது பெரியார், என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ் சங்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஜூன் 20ம் தேதி பகிர்ந்துள்ளது. இதில், பெரியார் 26 வயதான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார் என்று கூறியதோடு, தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியில் வசைபாடியுள்ளனர். இதை பலரும் வைரலாக […]

Continue Reading

பெரியாரை திருமணம் செய்யும்போது மணியம்மைக்கு 16 வயதா?

‘’70 வயதான ஈவேராவை, 16 வயதான மணியம்மை திருமணம் செய்துகொண்டதுதான் எச்ச திராவிட வரலாறு,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு, டிரெண்டிங் ஆகியும் வருகிறது. பெரியார் – மணியம்மை திருமணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருவதால், இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையா, பொய்யா என, விரிவாக ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதன் முடிவுகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: ஈவேராக்கு வயது 70 மணியம்மைக்கு 16 […]

Continue Reading

இந்து கோயிலை இடிப்போம் என்றாரா ஸ்டாலின்? மீண்டும் பரவும் வதந்தி…

இந்து கோவில்களை தகர்ப்போம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி-யின் பிரேக்கிங் கார்ட் மாடலில் ஒரு தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. பதிவிட்ட ஒரு வாரத்திலேயே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் நம்பகத்தன்மை உள்ளதா என்று பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம் #திமுகத் தலைவர் #திரு_ஸ்டாலின் மீண்டும் ஆவேசம்…. #இந்து_கோவில்களை #தகரப்போம் என்று #சூழுரை….? உண்மையான இந்துக்கள் தகவலைப் பரப்புங்கள்…. என்று […]

Continue Reading