
‘’360 அடி உயரத்தில் வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள இந்திய தேசியக்கொடி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி: 3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது! 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது! கொடி கம்பத்தின் உயரம் 360 அடி. கொடி கம்பத்தை நிறுத்த (நடுவதற்கு) கிரேன் செலவாக 60லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. கொடியின் உயரம் 80அடி, அகலம் 120 அடிதேவைப்படும்போது12 கொடிகள் (மாற்று) தயாராக உள்ளன!
இது ஒரு உலக சாதனை ஆகும்? வாகா எல்லை கோட்டில் இருந்து 200 மீட்டர் உள்புறமாக மிக
கம்பீரமாக பறக்கும் இந்திய தேசிய கொடி வீடியோவை பலருக்கு பகிருங்கள்! இந்தியர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்ஜெய் ஹிந்த்!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2016ம் ஆண்டு ஐதராபாத் நகரில் எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது.
Hindustan Times l Link 2 l News 18
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதன் நினைவாக, கடந்த 2016ம் ஆண்டு அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஐதராபாத் நகரில் 291 அடி உயரத்தில் கொடிக் கம்பம் ஒன்றை நிறுவி, அதில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சியை எடுத்தே, வாகா எல்லையில் நிறுவப்பட்ட 360 அடி உயர இந்திய தேசியக் கொடிக் கம்பம் என்று கூறி வதந்தி பரப்புகின்றனர்.
அதேசமயம், வாகா எல்லையில் 360 அடி உயர கொடிக் கம்பம் 2017ம் ஆண்டுதான் நிறுவப்பட்டது. அதற்கு முன்பாக, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள 293 அடி உயர கொடிக்கம்பம்தான் இந்தியாவில் மிக உயரமானதாக, இருந்தது.
ஆனால், பாகிஸ்தான் 400 அடி உயர கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், இந்திய அரசு மீண்டும் 2023ம் ஆண்டு 418 அடி உயர கொடிக்கம்பம் நிறுவி, தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Economic Times l Hindustan Times l Indian Express
எனவே, ஐதராபாத்தில் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது பகிர்ந்து, வாகா எல்லையில் எடுத்த காட்சி என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:360 அடி உயரத்தில் வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள இந்திய தேசியக்கொடி இதுவா?
Written By: Pankaj IyerResult: Misleading
