
‘’கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5000 தருகிறது,’’ என்று கூறி ஒரு தகவல் வாட்ஸ்ஆப் வழியே வைரலாக பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

நமது வாசகர் ஒருவர் இதனை வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டார். இதே தகவலை பலரும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இதுதவிர, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவலில், FG எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில், மத்திய அரசை குறிப்பிடும்போது centre government, Indian government போன்ற சொற்பதங்களையே பயன்படுத்துவார்கள். FG என்றால், Federal Government என அர்த்தம் வருகிறது. இத்தகைய சொற்பதம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில்தான் உபயோகிக்கப்படும். கூகுளில் கூட Federal Government என்று தகவல் தேடினால் அது முதலில் அமெரிக்காவைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

எனவே, இதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை என்று தெளிவாகிறது. இருந்தாலும், அடுத்ததாக, இந்த தகவலில் வேறு என்ன தவறுகள் உள்ளது என்று பார்க்கலாம்.
இதில் ஒரு லிங்கை இணைத்துள்ளனர். அந்த லிங்கை (https://bit.ly/free—funds) கிளிக் செய்தால், கீழே உள்ளதைப் போல ஒரு புதிய பக்கம் (http://fund.ramaphosafoundations.com/) திறக்கிறது. அதில், நீங்கள் இந்திய குடிமகனா, எவ்வளவு நிவாரண உதவி தேவை, அந்த பணத்தை எதற்காக செலவிடப் போகிறீர்கள் என்றெல்லாம் விவரம் கேட்கிறது.
மேற்கண்ட விவரங்களை நீங்கள் உள்ளீடு செய்ததும், உங்களது வங்கிக் கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை சரிபார்க்க அல்லது நேரடியாக உங்களது விவரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள, அந்த சர்வர் முயற்சிக்கிறது. அத்துடன், இந்த லிங்கை வாட்ஸ்ஆப் மூலமாக, உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யும்படி அந்த இணையதள சர்வர் சொல்கிறது.

இதுபற்றி மேலும் சொல்ல வேண்டும் எனில், இது ஒருவகையான தகவல் திருட்டு. பண ஆசை காட்டி உங்களை ஈர்த்து, உங்களது கணினி அல்லது செல்ஃபோனில் உள்ள உங்களின் வங்கிக்கணக்கு விவரங்களை திருடி, உங்களுக்குத் தெரியாமலேயே பணத்தை திருடுவதாகும். நிறைய ஹாலிவுட் திரைப்படங்களில் இத்தகைய காட்சிகளை காட்டியிருப்பார்கள். சமீபத்தில் கூட தமிழில் இரும்புத்திரை என்ற படம் இதே தகவல் திருட்டை மையமாக வைத்து வெளியாகியிருந்தது.
இதுபோலத்தான் மேற்கண்ட செய்தியும். இதனை ஆய்வு செய்து ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் தகவல் பகிர்ந்துள்ளார். அதனை கீழே இணைத்துள்ளோம்.
உண்மை என்னவெனில், இதுபோன்ற தகவல் தொழில்நுட்ப திருட்டுகளை நைஜீரியாவை சேர்ந்தவர்கள்தான் செய்வார்கள். இந்த விளம்பர மோசடியும் அப்படியான ஒன்றுதான். நமக்கு வந்த வாட்ஸ்ஆப் செய்தியை மீண்டும் ஒருமுறை உற்று கவனித்தால் இது புரியும்.

இந்த லட்சினை, நைஜீரிய அரசுக்குச் சொந்தமானதாகும். நைஜீரிய அரசை Federal Government of Nigeria என்றுதான் சொல்கிறார்கள்.

இந்த வாட்ஸ்ஆப் செய்தியின் நைஜீரிய வெர்ஷனை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இதற்கு மேல் இதில் ஆய்வு செய்ய ஒன்றும் இல்லை. நைஜீரியாவை மையமாக வைத்து செயல்படும் தகவல் தொழில்நுட்ப திருடர்கள், தங்களது தொழிலை அவ்வப்போது அப்டேட் செய்துகொள்வார்கள்.
‘’அழகான் பெண்கூட சாட்டிங் செய்ய வேண்டுமா; உங்களிடம் நான் மனம் திறந்து பேச வேண்டும்; நான் ஒரு அனாதைப் பெண்; ஆசிரமத்தில் வளர்கிறேன்; நான் ஐவரி கோஸ்ட் நாட்டின் படைத்தளபதி மகள்; எனது தந்தையை சிலர் கொன்றுவிட்டனர்; உங்கள் நாட்டில் நான் எனது பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறேன்,’’ என்பது போன்ற இமெயில் மோசடிகளின் புதிய வெர்ஷன்தான் இந்த கொரோனா நிவாரண நிதி தகவலும்.
நமது வாசகர்கள் இத்தகைய சைபர் குற்றங்களை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். இத்தகைய சைபர் கிரைம் தொடர்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.

Title:கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5000 தருகிறதா?- வாட்ஸ்ஆப் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
