
‘’செருப்புக்கு பதிலாக ஷூ அணிந்து நடமாடும் அண்ணாமலை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ செறுப்பு தான போடக்கூடாது ஷூ போடலாம்ல.🤡.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்னு சபதம் எடுத்தவரோட காலில் என்ன அது?🧐.. ’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திமுக.,வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரையிலும் நான் காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, கடந்த 2024, டிசம்பர் மாதம் 26ம் தேதி அறிவித்தார். அவரது இந்த சபதம் பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் சில செய்தி ஆதாரங்கள் இதோ…
Thanthi TV l News 7 Tamil l Maalaimalar
இத்தகைய சூழலில், அண்ணாமலை செருப்புக்கு பதிலாக ஷூ அணிந்து நடமாடுவதாக, ஒரு புகைப்படத்தை திமுக ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த புகைப்படம் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது. அண்ணாமலை இன்றளவும் அவரது சபதத்தை பின்பற்றும் காட்சிளைக் காண முடிகிறது.
எனவே, 12 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து, தற்போது நடந்தது போன்று வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:செருப்புக்கு பதிலாக ஷூ அணிந்து நடமாடும் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Pankaj IyerResult: Misleading
