
‘’போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’இது ரீல்ஸ் இல்ல..
போனை பேசிக்கொண்டே
கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறிப் போய் இருக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் பங்க் வந்த பெண் ஒருவர் செல்பேசி பயன்படுத்தியபடி, அவர் வந்த இருசக்கர வாகனத்தை விட்டு, வேறொரு இருசக்கர வாகனத்தில் ஏறி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது சித்தரிக்கப்பட்ட வீடியோ எனவும், உண்மையான சம்பவம் கிடையாது எனவும் தெரியவந்தது.
இதன்படி, Sanjjanaa Galrani என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2024, அக்டோபர் மாதம் மேற்கண்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதற்கு, ‘’ Who is Lucky? 😲😲
Who is Lucky? 😲😲…
Disclaimer: Thank you for watching! Please note that this page features scripted dramas, parodies, and awareness videos. These short films are created for entertainment and educational purposes only. All characters and situations depicted in the videos are fictional and intended to raise awareness, entertain, and educate.Please avoid using mobile phones at the fuel station.,’’ என்று கேப்ஷன் எழுதப்பட்டுள்ளது.
இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ ஒரு scripted குறும்படம் என்று தெளிவாகிறது. மேலும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்று ஏராளமான குறும்படங்கள் இடம்பெற்றுள்ளதையும் கண்டோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ, சித்தரிக்கப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Pankaj IyerResult: Misleading
