தேவேந்திர பட்னாவிஸ்க்கு தனது காலால் திலகமிட்ட மாற்றுத் திறனாளி பெண் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’தேவேந்திர பட்னாவிஸ்க்கு தனது காலால் திலகமிட்ட மாற்றுத் திறனாளி பெண்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ A physically handicapped girl took aarti for Devendra Fadnavis who was elected as the Chief Minister of Maharashtra* Both are great
இதற்கெல்லாம் பெரிய மனது வேண்டும் கர்வம் ஆணவம் இருக்காது. 🙏🙏🙏,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு, தனது காலால் அவரது நெற்றியில் திலகமிடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது. 

இந்த பதிவில், ‘’மாற்றுத் திறனாளி தங்கை ஒருவர், தன்னம்பிக்கையுடன் எனக்கு அவரது காலால் திலகமிட்டு ஆசிர்வாதம் வழங்கினார். இது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்,’’ என்று தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார். 

பல்வேறு ஊடகங்களிலும் இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளது. அவற்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Patrika l NDTV l Amar Ujala

அதேசமயம், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024, நவம்பர் மாதத்தில்தான் வெளியாகின. 

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவருகிறது.  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:தேவேந்திர பட்னாவிஸ்க்கு தனது காலால் திலகமிட்ட மாற்றுத் திறனாளி பெண் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: MISLEADING