திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கியதாக பரவும் வீடியோ!

அரசியல் சமூக ஊடகம்

‘’திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கிய வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரம் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது. 

தகவலின் விவரம்: 

இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு அனுப்பி வைத்து, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 

இதன்பேரில், ஃபேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ பகிரப்பட்டதை கண்டோம். 

Facebook Claim LinkArchived Link 

உண்மை அறிவோம்:
2018ம் ஆண்டில் சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தற்போது மீண்டும் டிரெண்டிங் ஆகியுள்ளது. இதில் உற்று கவனித்தால் Puthiyathalaimurai ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளதை காணலாம். 

இதன் அடிப்படையில் தகவல் தேடியபோது, 2018ம் ஆண்டு, பெரம்பலூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் பணிபுரியும் பெண்ணை திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் தாக்கியதாக பரவிய வீடியோ பற்றிய செய்திகள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் புதிய தலைமுறை வெளியிட்ட வீடியோ. அந்த வீடியோவை எடுத்துத்தான் தற்போது தவறான தகவலுடன் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

Oneindia.com Link Asianet Tamil News Link 

சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது அப்போதே அவரது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, 2018ம் ஆண்டில் பியூட்டி பார்லரில் நடந்த சம்பவத்தை பலர், மருத்துவமனையில் நடந்த விசயம் என்று கூறி தவறான தகவல் பரப்பியுள்ளனர். அதனை மீண்டும் சிலர் தற்போது பகிர தொடங்கியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட வீடியோ பற்றிய தகவலில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள். 

Avatar

Title:திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கியதாக பரவும் வீடியோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False