FactCheck: நீதிபதி சந்துரு ஓய்வு?- 2013ல் நிகழ்ந்ததை புதியதுபோல பகிர்வதால் குழப்பம்!

அரசியல் | Politics சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

‘’நீதிபதி சந்துரு ஓய்வு பெற்றார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, இது எப்போது நிகழ்ந்த சம்பவம் எனக் கேட்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தேடியபோது, பலரும் இது இப்போது நிகழ்ந்ததைப் போல சித்தரித்து வருவதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link 

உண்மை அறிவோம்: 

நீதிபதி சந்துரு நேற்று (ஜூன் 20/21, 2021) ஓய்வு பெற்றதைப் போலவும், மிக எளிமையாக ரயிலில் வீடு திரும்பினார் என்பது போலவும் ஒரு அர்த்தத்தை இந்த ஃபேஸ்புக் பதிவு ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவிற்கு கமெண்ட் பகிர்ந்தவர்களும், இதனை சமீபத்திய நிகழ்வாகக் கருதி, கமெண்ட் பகிர்வதையும் கண்டோம்.

இது தினமலரில் வெளியான செய்தி என்றும் மேற்கோள் காட்டுகின்றனர். எனவே, நாம் தினமலரில் இப்படியான செய்தி எப்போது வெளியானது என்ற விவரம் தேடினோம்.

இதன்படி, 2013 மார்ச் 09ம் தேதி குறிப்பிட்ட செய்தியை தினமலர் வெளியிட்டிருக்கிறது.

Dinamalar News Link I Archived Link

இதுபற்றி இதர ஊடகங்களிலும் கூட அப்போதே செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அவற்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Timescontent Link

2013, மார்ச் 8ம் தேதி சந்துரு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அதன்பின், சென்னை புறநகர் ரயிலில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.

The Hindu Link

சுமார் 8 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த செய்தியை எடுத்து, சம்பந்தமே இல்லாமல், எதோ 2021ம் ஆண்டில் நிகழ்ந்ததைப் போல, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பகிர்ந்து, பொதுமக்களை குழப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:நீதிபதி சந்துரு ஓய்வு?- 2013ல் நிகழ்ந்ததை புதியதுபோல பகிர்வதால் குழப்பம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context