முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்?- ஃபேஸ்புக் விஷமம்!

‘’முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link விஜய் மக்கள் இயக்கம் நைஜீரியா என்ற ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ‘’நடிகர் விஜய், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கொரோனா வைரஸ்க்கு ரூ.250 கோடி தருகிறேன் என்று சும்மா சொன்னேன். 10 பைசா தரமாட்டேன். ஏப்ரல் […]

Continue Reading

கியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா?

‘’உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை கியூபா அனுப்பியுள்ளது,’’ என்று பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்வதை காண முடிகிறது.  உண்மை அறிவோம்: இதில், ‘’கியூபாவிற்கு உலக நாடுகள் ஒருகாலத்தில் உதவவில்லை. அதன்பின், பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நன்கு திட்டமிட்டு அந்நாட்டில் மருத்துவ சேவையை […]

Continue Reading

இத்தாலியில் பொருட்களை வாங்க குவித்த கூட்டமா இது? – ஃபேஸ்புக் வைரல் வீடியோ

இத்தாலியில் ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 4.30 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் கடையின் ஷட்டரை திறக்க ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஷட்டர் கொஞ்சம் திறந்ததுமே மக்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். ஆளாளுக்கு பொருட்களை எடுக்க போராடுகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் […]

Continue Reading

நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தாரா?

‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இந்த பதிவில் நடிகர் விஜய், ‘’கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ரூ.300 கோடி நிவாரண உதவி செய்துள்ளார். அவரை நாம் முதல்வராக மாற்ற வேண்டும்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் […]

Continue Reading