நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தாரா?

Coronavirus சினிமா தமிழகம்

‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

இந்த பதிவில் நடிகர் விஜய், ‘’கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ரூ.300 கோடி நிவாரண உதவி செய்துள்ளார். அவரை நாம் முதல்வராக மாற்ற வேண்டும்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது, இது போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என. அதில், ரூ.300 கோடி என குறிப்பிடாமல், ‘கொடி’ எனக் குறிப்பிட்டுள்ளனர். தினமலர் ஊடகத்தின் பெயரில் இந்த நியூஸ் கார்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிவாரணம் என்பதை, ‘நிர்வாணம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு முன்னணி ஊடகம் இப்படி எழுத்துப் பிழையுடன் அதுவும் மரபுப் பிழையுடன் நியூஸ் கார்டு வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதுபற்றி ட்விட்டர் பயனாளர் ஒருவர் கேலி செய்து ஏற்கனவே பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம். 

Archived Link

இதுதவிர, நடிகர் விஜய் இப்படி ஏதேனும் நிவாரண உதவி அறிவித்தாரா என தகவல் தேடினோம். அப்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் அறிவித்திருந்தால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும். ஆனால், அதுபற்றி செய்தி எதுவும் காண முடியவில்லை.

மாறாக, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உதவ முன்வராதது பற்றி விமர்சித்து வெளியிட்டிருந்த செய்தி ஒன்றை மட்டும் கண்டோம்.

Tamil filmbeat LinkArchived Link 

இறுதியாக, நமக்கு தெரிந்த சினிமாத்துறை பிஆர்ஓ நண்பர்களிடம் பேசினோம். இதுபற்றி விளக்கம் அளித்தவர்கள், ‘’விஜய் போன்றவர்கள் ரூ.300 கோடி அளவுக்கு நிதி உதவி தருவதாகக் கூறுவது நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது. இவ்வளவு பணத்தை நன்கொடையாக நடிகர்கள் யாரும் தர வாய்ப்பில்லை. இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கூட ரூ.25 கோடிதான் கொரோனா வைரஸ் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். அதுபோல, கணிசமான தொகையைத்தான் ஒருவேளை விஜய், அஜித் போன்றவர்களும் வழங்க வாய்ப்புள்ளது. எனினும், இதுபற்றி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மை தெரியவரும்,’’ எனக் குறிப்பிட்டனர்.

மேற்கண்ட நியூஸ் கார்டை fotoforensics இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் இது போலியானது என்று சந்தேகமின்றி தெரியவருகிறது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், விஜய் ஆதரவாளர்கள் இப்படி எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இன்றி, போலியான நியூஸ் கார்டை தயாரித்து பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “நடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தாரா?

  1. ஒரிஜினல் பதிவர்களை விட்டுட்டு, அந்த பதிவு போட்டோஷாப் தான் னு கேலிபண்ணி ஷேர் பண்ணிய பதிவர்களை மடக்கும் நடுநிலைவாதி ஐயரை வைத்து இந்துக்களுக்கு எதிராக இப்படி நடவடிக்கை எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Comments are closed.