அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை மது அருந்தி கொண்டாடிய தீவிர இந்துத்துவா ஆதரவாளர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாஜக தொண்டர்கள் மது அருந்தும் பழைய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 29ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், "*அயோத்தியில் ராமர் பூஜை கோலாகலமாக சங்கிகளால் கொண்டாடப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதைப் பாரதிய ஜனதா கட்சியினர் மது அருந்தி கொண்டாடியதாக வீடியோ பகிரப்பட்டுள்ளது. முன்பு இந்த வீடியோவை வைத்து குஜராத்தில் மது அருந்தும் பாஜக தொண்டர்கள் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது மது அருந்தி கொண்டாடிய பாஜக தொண்டர்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். எனவே, விரைவு உண்மை கண்டறியும் சோதனைக்கு இந்த வீடியோ பதிவை எடுத்துக்கொண்டோம். இந்த வீடியோ அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடந்த 2024 ஜனவரி 22 அன்றோ அல்லது அதற்கு பிறகோ எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடி எடுத்தோம்.

உண்மைப் பதிவைக் காண: bhaskar.com I Archive

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2021 டிசம்பர் 22ம் தேதியை ஊடகம் ஒன்று தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் ஹரித்துவாரில் நடந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்கள் மது அருந்திய வீடியோவை காங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகிறது என்று அந்த யூடியூப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2024 ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டபோது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஹரித்துவாரில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் மது அருந்திய வீடியோவை தவறாக பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பை மது அருந்தி கொண்டாடிய பாஜக தொண்டர்கள் என்று பரவும் வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அயோத்தி ராமர் கோவில் திறப்பை மது அருந்தி கொண்டாடிய பாஜக தொண்டர்கள் என்று பரவும் வீடியோ 2021ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமர் கோவில் திறப்பை கொண்டாடிய சங்கிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False