‘’ ஹமாஸ் படையினரின் சடலம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’அனைத்து போராளிகளையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக ஆமீன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Facebook Claim Link l Archived Link

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் தகவல் தேடியபோது, இந்த வீடியோ x (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பதிவிடப்பட்டிருந்ததைக் கண்டோம்.

இந்த x பதிவில் உள்ள சில வார்த்தைகளை கொண்டு கூகுளில் தகவல் தேடியபோது, Bali Tribune என்ற இந்தோனேசிய ஊடகம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றை கண்டோம். அதில், ‘’இந்தோனேசிய இளைஞர் தேசியக் கமிட்டி மற்றும் சில அமைப்புகள் இணைந்து கோலோ நரங் (Calonarang) எனப்படும் இந்தோனேசிய நாட்டுப்புறவியல் நிகழ்வை நடத்தி உள்ளனர். இந்த நிகழ்வில் 108 பேர் பங்கேற்று, இறந்தவர்களைப் போன்று நடித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கெடுட் மரியா கலைக் கட்டிடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது,’’ என்று கூறப்பட்டுள்ளது.

Balitribune link

மேலும், Bali Klasik Channel New என்ற யூடியூப் சேனலிலும் இதே காணொளி வெளியிடப்பட்டிருந்தது.

எனவே, 2022ல் இந்தோனேசிய நாட்டில் நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகம் தொடர்பான வீடியோவை எடுத்து, ஹமாஸ் படையினரின் சடலம் என்று கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஹமாஸ் படையினரின் சடலங்கள் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: MlSLEADlNG