
‘’தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்வு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இருட்டுக்கடை அல்வா இனிக்கவில்லை; கசக்கிறது.
01/07/2025 முதல் புதிய மின் கட்டண முறை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் மின்சார கட்டண உயர்வு என்று குறிப்பிட்டு, ஒரு அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி என்று தெரியவந்தது.
கடந்த 202ம் ஆண்டு The Hindu Tamil ஊடகத்தில் குறிப்பிட்ட செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனையே தற்போது மறுபகிர்வு செய்து, சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்தியை சிலர் பரப்புகின்றனர்.
அடுத்தப்படியாக, இந்த வதந்திக்கு, தமிழ்நாடு அரசு தரப்பிலும் தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தற்போதைக்கு எந்த மின் கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை, என்று குறிப்பிட்டு, செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, மின்கட்டணம் புதியதாக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் தகவலில் உண்மையில்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
