வட இந்தியாவில் வாக்கு கேட்டுச் சென்று பாரதிய ஜனதா கட்சியினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாரதிய ஜனதா கட்சியினரை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தாக்கும் பழைய வீடியோ ஃபேஸ்புக்கில் புதிதாக பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "*வடக்கே வெளுப்பு துவங்கியது,வாக்கு கேட்டு சென்ற பிஜேபி கட்சிகளுக்கு*" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இதுதொடர்பாக சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது.

Archive

ஏதேனும், இடைத்தேர்தலின் போது நடந்ததா என்று தேடிப் பார்த்தோம். அப்போது அங்கு தேர்தல் எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது.

2022 பிப்ரவரி 9ம் தேதி வெளியாகி இருந்த செய்தியில், "தெலங்கானா மாநிலம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஆர்எஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது நரேந்திர மோடியின் உருவ பொம்மையை டிஆர்எஸ் கட்சியினர் எரிக்க முயன்றனர். இதைத் தடுக்க பா.ஜ.க-வினர் முயற்சி செய்தனர்.இதனால் தடி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பாஜக-வினரை டிஆர்எஸ் கட்சியினர் அடித்து விரட்டினர். போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: thehansindia.com I Archive

இந்த தாக்குதல் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வேறு ஒரு வீடியோவை இதற்கு முன்பு நாம் ஆய்வு செய்திருந்தோம்.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வட இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டுச் சென்ற பாஜக.,வினரை பொது மக்கள் தாக்கியதாகப் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வட இந்தியாவில் ஓட்டு கேட்டு சென்ற பாஜக-வினரை தாக்கிய பொது மக்கள் என்று பரவும் வீடியோ 2022ல் தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வட இந்தியாவில் வாக்கு கேட்டுச் சென்ற பா.ஜ.க-வினர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False