FactCheck: புதுச்சேரியில் பிப்ரவரி 2022-ல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடக்கிறதா?

சமூக ஊடகம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு

‘’புதுச்சேரியில் 2022 பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்திற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆட்களை தேர்வு செய்வு செய்யும் முகாம் நடைபெறுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

Facebook Claim Link I Archived Link

Shakthi News என்ற ஊடகம் வெளியிட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’அறிவிப்பு – ராணுவத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு.. சென்னையிலுள்ள ராணுவத்திற்கு ஆட்களைத் தேர்வு செய்யும் தலைமை அலுவலகம் சார்பில் புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 3ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை ராணுவத்திற்கு டெக்னிக்கல் பிரிவிலான ராணுவ வீரர்கள், செவிலியர் உதவியாளர்கள், பொதுப்பணி ராணுவ வீரர்கள், எழுத்தர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிசம்பர் 20ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் விரிவாக தேடியபோது, இது 2017ல் வெளியான செய்தி என தெரியவந்தது. இதுபற்றி அப்போதே ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

குறிப்பிட்ட வேலைவாய்ப்பு செய்தியில் உள்ள விவரம் அப்படியே மாறாமல், இதுபற்றி ஊடகங்களில் முன்னர் வெளியான செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

The Hindu News Link I Nyooz.com Link

இதனை அப்படியே தேதி, முகாம் நடக்கும் இடம், காலிப் பணியிட விவரம் உள்ளிட்ட அனைத்தும் மாறாமல், அப்படியே எடுத்து, 2021-22ல் நடப்பதுபோல பகிர்ந்து சமூக வலைதள பயனாளர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட வேலைவாய்ப்பு நியூஸ் கார்டை மீண்டும் ஒருமுறை கீழே இணைத்துள்ளோம். இந்து வெளியிட்ட செய்தியை படித்துவிட்டு, இந்த நியூஸ்கார்டை பார்த்தால், இரண்டுமே அச்சு பிசகாமல் அப்படியே உள்ளதைக் காணலாம்.

தற்போதைய 2021-22ல் ராணுவ வேலைவாய்ப்பு முகாம் எதுவும் புதுச்சேரியில் நடைபெறுகிறதா என https://joinindianarmy.nic.in/ சென்று, விவரம் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் இல்லை. 2021-22ல் நடைபெறும் ஆட்கள் தேர்வு முகாம் இடம், தேதி உள்ளிட்ட விவரங்களை பிடிஎஃப் வடிவில் அந்த இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். அதில், புதுச்சேரியில் எதுவும் நடைபெறுவதாகக் குறிப்பிடவில்லை. இந்தியா முழுக்க இதர இடங்கள், தேதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சென்னை மையம் சார்பாக நடத்தப்படும் ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் எந்த இடத்தில் நடைபெறுகிறது என இதுவரை குறிப்பிடப்படவில்லை.

ஆதாரத்திற்காக அந்த செய்தியறிக்கையை கீழே இணைத்துள்ளோம்.

Army Rally Notification 2021-22 PDF Link

நடப்பு 2021-22 ஆண்டில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் சார்பாக நடத்தப்படும் ஆட்களை தேர்வு செய்யும் முகாம் எந்த இடத்தில் நடைபெறுகிறது என இதுவரை (டிசம்பர் 27, 2021 வரை) கூறவும் இல்லை. தேதி விவரம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதுவும் கூட, பிப்ரவரி மாதத்தில் எதுவும் சென்னை (புதுச்சேரி) மண்டலத்தில் இல்லை.

எனவே, ராணுவம் வெளியிட்ட 2017 செய்திக் குறிப்பை எடுத்து, 2021-22ல் நடைபெறுவதைப் போல வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:புதுச்சேரியில் பிப்ரவரி 2022-ல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடக்கிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply