ஆந்திரா குண்டூர் ஜின்னா கோபுரத்தில் அமித்ஷா உத்தரவால் தேசிய கொடி வர்ணம் பூசப்பட்டதா?

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பழமையான ஜின்னா டவரில் தேசிய கொடியேற்ற தடை விதிக்கப்பட்டதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு அடிப்படையில் அந்த கோபுரத்துக்கு தேசிய கொடியின் மூவர்ணம் பூசப்பட்டது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜின்னா டவர் , ஆந்திரா குண்டூரி்ல் உள்ளது , […]

Continue Reading

மாணவி தற்கொலை; பாஜக நடத்தும் போராட்டம் நியாயமானது என்று ஜெகத்ரட்சகன் கூறினாரா?

மத மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக முன்னெடுத்த போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டம் நியாயமானதே. கட்டாய மதமாற்றத்தால் பலியான மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு […]

Continue Reading

பிரியாணி அண்டா பத்திரம்; தமிழ் ஊடகங்களின் பெயரில் பகிரப்படும் வதந்தி…

‘’பாஜக போராட்டம் நடத்துவதால் சென்னை வள்ளுவர் கோட்டம் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் மூடப்படுகின்றன,’’ எனக் குறிப்பிட்டு பகிரப்படும் நியூஸ் கார்டுகள் சிலவற்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாளை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் அடைக்கப்படுகிறது. பிரியாணி அண்டாக்கள் திருடு போவதை தவிர்க்க நாளை ஒருநாள் மட்டும் இந்த […]

Continue Reading