
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. அறிஞர் அண்ணா பற்றிய அண்ணாமலையின் பேச்சால் அதிமுக – பாஜக இடையே மோதல் முற்றிய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சமீபத்தில் அந்த கருத்தை ஜெயக்குமார் கூறவில்லை. பதிவை பார்க்கும் போது, அதில் தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால், சமீபத்தில் ஜெயக்குமார் இந்த பேட்டியை அளித்தது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது.
நிலைத் தகவலிலும் இந்த நியூஸ் கார்டு இப்போது வெளியானது இல்லை என்று குறிப்பிடப்படவில்லை. அந்த நியூஸ் கார்டை கிளிக் செய்து பார்க்கும் போது, அதில் தேதி இருக்கிறது. 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அந்த நியூஸ் கார்டு வெளியாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். 2023ம் ஆண்டு பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது. இரண்டு கட்சிகளும் தனித்தனியாகக் கூட்டணியை உருவாக்கி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தன. அதன் பிறகு 2025ம் ஆண்டு இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேயும் கூட்டணி ஏற்பட்டது. தற்போது அன்புமணியின் பாமக, டிடிவி தினகரன் அணியும் அந்த கூட்டணியில் இணைந்துள்ளன.

2023ம் ஆண்டு வெளியான நியூஸ் கார்டை தற்போது வெளியிட்டது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தேதியை மறைத்து, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருப்பது என்று உறுதியாகிறது.
முடிவு:
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று 2023ம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியை 2026 பிப்ரவரியில் சமூக ஊடகங்களில் தவறான புரிதல் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram
Title:அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று ஜெயக்குமார் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context


